Todays Date:

வாழ்த்துச்சொல்லுவோம்! பதிவர் ரிஷான் ஷெரீப் கு இன்று பிறந்தநாள்..!







வலையுலகில் தனக்கென தனியான நடையில் பயணித்துக்கொண்டிருக்கும் அன்பு நண்பர் ரிஷான் ஷெரீப் இன் 23 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.
ரிஷானுக்கு எனது வாழ்த்துக்கள் !






விரிவாக படிக்க ……..

அடைமழை – வெறும்வீதி – நீ – நான்



மென்காற்றோடான வாசம்

இந்த வழியில்தான்
சென்றிருக்கிறாய்

வழியிடையெங்கும்
உன் விழிபார்த்த இடமெல்லாம்
விழியொளியில் மெய்மறந்து
சலனமில்லாமல்
அடங்கிப்போயிருக்கின்றன

கால்பதித்த சுவடுகளில்
இனிப்புச்சுவை தேடி
எறும்பூறி மார்பதைக்கின்றன

மணல்வெளியில் சிதறிய
உன் ஒற்றைப்பூவைச் சுற்றித்தான்
எத்தனை வண்ணத்துப்பூச்சுகள்

சலங்கை ஒலிக்குள்
சவீகரித்துப்போனதாய்
சத்தமில்லாமல் விழுகிறது
மழைத்துளி

என் கன்னங்கள் மட்டுமல்ல
அந்தப் பெருநிலமே
நனைகிறது

இதயத்துக்கு உரம் தந்தவளால்
முழு உடலும் ஈரமாகிறது

அடைமழையில்
கண்ணீருக்கான அடையாளங்கள்
காணாமல்போகின்றன
இந்தமழையும்
உன் சிரிப்பும் ஒன்றுதான்

கரைந்துபோகும் உன் சுவடுகளை
கடன் கேட்டா இனிப்பெறமுடியும்?
எனக்கான உன் தற்காலிக
அன்பைப் போலத்தான் இவையும்

உன் முன்னால் நின்று
பேசியதைவிட
உன்னோடு பேசியவை அதிகம்

ஏன்
இந்த பாழ்வீதியில்நின்றுகூட
உன்னோடு நடக்கும்
மௌன ஏகுதல்களுக்கு
ஆதாரம் ஏது?

இந்த வீதி
மழை
மணம்
சுவடுகள்
எல்லாவற்றையும் விட்டுச்செல்கிறேன்…
நீ சென்ற வழிக்கு நேரெதிராக!

நான் நீ இணைந்ததானதைத் தவிர்த்து
எனக்கானவளில்லாத உன்
எதையுமே நான்
எடுத்துச்செல்வதில்லை

மரணம் துரத்தினாலும் - உன்
மடியில் இறக்கும் வேண்டுதல்
இனி என்
பட்டியலில் இல்லை!



- ஆர்.நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

இயற்கையும் காதல்கொள்ளும்..!




சூரியக் காதலன்
எங்கேயென
மின்மினிகளை ஏவித்
தேடுகிறாள் பூமிப்பெண்

காரிருளில்
கண்ணுக்கெட்டாத்தூரம் சென்று
கண்ணயர்ந்துவிட்டானோ என
தென்றலையும்
தூதனுப்புகிறாள்

“எங்கே போனாலும்
அள்ளியணைக்க
வரத்தானே வேண்டும்
அப்போது கிள்ளி இழுத்து
கோபம் தீர்க்கிறேன்”

என
அவனை எதிர்பார்த்தே
நிசப்தமாய் நினைவிழந்து
தூங்குகிறாள்

கழிகிறது நேரம்…

மறுபொழுதில்….

தன்னவளை ஆக்கிரமித்த
பனித்துளிகளை
இமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு
தூங்கும் பெண்ணை
துயிலெழுப்புகிறான் ஆதவன்…

காதலனைக் கண்ட களிப்பில்
கோபம் மறந்து
குதூகலித்து
வாரியணைக்க முற்படுகையில்

அந்தோ…..

நொடிப்பொழுதில் முந்திக்கொண்ட
முகிலவன்
முன்னதாய் முத்தமிடுகிறான்…

முத்தத்தின் தகப்பில்
உணர்வுகள் உயிர்க்க
மிதம்கொண்டு மௌனித்து
மேனிசிவக்கிறாள் அவள்…
உச்சிமுதல் சிவந்ததில்
வானம் நிறந்து நிறைகிறது

ஓ…
காதலர்களின்
புணர்தலைக் கண்ட சேவல்
கூவிக்கூவி கூட்டம் கூட்டுகிறது
விடயம் அறிந்த
விண்மீன்கள்
வெட்கத்தில் மறைய
சல்லாபம் காண
கூடுவிட்டுப் பறக்கின்றன
பறவைகள்

மீள்நினைவுடன் மீண்டெழுகிறாள்
நாணத்தோடவள்...

எப்போதும் என்னோடிருவென
காதலனுக்கு உத்தரவிட்டபடி!

-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

எனது சினிமா : சங்கிலித்தொடர்

ஒப்பீட்டு ரீதியில் தற்காலத்தில் சினிமாவின் மீது மக்கள் கொண்டுள்ள பிடிப்பு அதிகம் எனலாம். காத்திரமான சினிமா படைப்புகள் காலத்தால் தோற்றுவிடுவதில்லை.பல் அங்கங்களிலும் சினிமா, வாழ்வோடும் சரி மனதோடும் சரி மாற்றங்களை ஏற்படுத்துவதாய் உள்ளது.
எனக்கும் அதேபோல் தான்.சினிமா படைப்பாளிகள், நடிகர்கள் போல் பேசவேண்டும் உடுக்க வேண்டும் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் மனதளவில் பலவற்றை நேசித்து மகிழ்ந்து அழுதிருக்கிறேன்.
சினிமா பற்றிய பலவற்றை எழுதத்தூண்டி இந்தச் சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு என்னை அன்பாய் அழைத்த என் அன்பு நண்பர்கள் நம்ம வந்தியத்தேவனுக்கும் நம்ம மாயாவுக்கும் எனது இதயநன்றிகள்।

01। எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சொல்வதற்கு சரியாக நினைவில் இல்லை. முதன் முதலாக பார்த்த படம் என்ன என்பதும் நினைவுக்கெட்டியவரையில் இல்லை. ஆனால் நாயகன் படம் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.
எமது ஊரில் திரையரங்கு இல்லை।டீவி டெக் கொண்டுதான் படம் காட்டுவார்கள் (நம்ம சொல்ற படம்காட்றது இல்லப்பா). 1990 களில் ஒரு வீட்டில் டெக் இருக்கிறதென்றால் அவர் பெரிய மனிதர் தான். நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டார்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படம் அந்த டெக் உரிமையாளரின் வீட்டில் ஓடும்.
அங்கு அனுப்புவதற்கு எனது பெற்றோர் விரும்பாததால் இடைக்கிடை வாடகைகொடுத்து அந்த டெக்கினை வாங்கி படம் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த படம் தான் நாயகன். கமலும் குழந்தைகளும் மழையில் நனைந்து பாடும் பாடல் நெஞ்சைவிட்டகலாதது. கமலஹாசனின் நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்ததால் அவரது படத்தைத் தவிர ஏனைய படங்களை பார்க்க நான் கொஞ்சம்கூட விருப்பமில்லாதவனாக இருந்தேன். மழை பெய்யும் காலங்களில் பேனை மை உடலில் ஊற்றிக்கொண்டு (தென்பாண்டிச் சீமையில பாடல்…) கமலைப் போன்று நடிக்க முற்பட்டுத் தோற்றுப்போனதும் உண்டு. சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் இவரும் மனிதப்பிறப்புதானா என வியந்த சிறுவயதுக்காலமும் உண்டு.

எமது வீட்டிலும் டெக் வாங்கிய பின்னர் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன், மைக்கேல் மதன காம ராஜன், தளபதி, தங்க மகன்,குணா, மூன்றாம்பிறை, மௌனராகம், பயணங்கள் முடிவதில்லை, கேளடி கண்மணி,சலங்கை ஒலி, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் பார்த்தது நினைவிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் படங்கள் பார்க்கத் தொடங்கிய பின்னர் அண்ணாமலை பாடல்மெட்டுகளும், பிரபுவின் சின்னத்தம்பி மெட்டுகளும் காதுமடல்களில் உரசுவதுபோன்ற உணர்வுகளும் உதடுகளின் முனுமுனுப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டிலும் டெக் வாங்கியவுடன் இரவு பகல் என அப்பகுதி மக்கள் வந்துபோவதும் அடிக்கடி படம்பார்ப்பதும் வாடிக்கையானது. ஆனாலும் குறிப்பிட்ட சில படங்களைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. பெற்றோரின் கண்டிப்பும் இதற்குக் காரணம்.

०२।கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
கடைசியாக தாம்தூம் பார்த்தேன். இணையங்களில் விமர்சனங்கள் வாசித்திருந்தாலும் பாடல்களுக்காகவும் பாடல்காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கத் தோன்றியது. திரையும் காட்சியிடலும் எனது துறைசார்ந்தவை என்பதால் காட்சிகளை கமராக்கள் உள்வாங்கிய விதம் அமைப்பு என்பவற்றை நான் அதிகம் கவனிப்பதுண்டு. அந்த வகையில் ஏராளமான காட்சிகளை மனதுக்குள் இருத்திக்கொண்டேன்.

०३.கடைசியாக அரங்கில் அன்றி பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
இறக்குவானை வீட்டுக்கு சென்றிருந்தபோது கமலின் தசவதாரம் பார்த்தேன். இலங்கையின் "இருக்கிறம்" சஞ்சிகையில் வெளியான தசவதாரமும் பத்துப்பிழைகளும் என்ற விமர்சனக் கட்டுரையில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு விடைகாணுவதற்காக அந்தப்படத்தை பார்த்தேன். பத்துப்பாத்திரங்கள் ஏற்று நடித்துப் பிரமாண்டம் என கமல் காட்டுவதாகவும் அதிகமான பாத்திரங்கள் கதையோடு ஒத்துவராததாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மேலும் பல காரசாரமான வாதங்கள் கமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இவை எல்லா விமர்சனங்களையும் விட கமலின் நடிப்பும் இளமைத் தோற்றமும் வியப்பில் ஆழ்த்தியதுடன் உலக நாயகன் மதங்களை சரியாகக் கையாண்டு ஈற்றுத்தீர்வு தரும் விதமும் அருமையாக இருந்தது.

०४.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
காதலுக்கு மரியாதை. காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். சில வேளைகளில் அப்போதைய விடலைப்பருவமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

०५।உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்?
அரசியலோடு தொடர்பில்லையெனினும் அரசியலும் ஒரு காரணம் என சொல்லக்கூடிய ஈழத்திலிருந்து இராமேஸ்வரத்துக்கு சென்று தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் பற்றிக் கதைகூறிய இராமேஸ்வரம்.
பாடல்வரிகளில் எம்மவர்களின் கண்ணீரை வரிகளாக்கியதுபோன்ற உணர்வு. தாய்நிலத்தை பிரிந்து உறவு,நெருக்கங்களை துறந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்க்கும் நம்சமூகத்துடன் தொடர்புடையதான பாடலும் படமும்.

"எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா॥?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா? "

இந்தப்பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ பாரமாயும் உணர்வின் ஈர உணர்வுகளை தொட்டுச்செல்வதாயும் இருக்கும். குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் அமைந்த சிறுமியின் குரல்.

०६.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஆமாம். வாரஇறுதி நாட்களில் சினிமா இணையப்பக்கங்களில் நுனிப்புல்மேய்வதுண்டு. புதிய படங்களில் இயக்குநர்,இசையமைப்பாளர் விபரங்களைத் தேடும் ஆவல் அப்போதைப்போன்று இப்போதும் உண்டு. புதிய படங்கள் பற்றி ஒவ்வொருவரின் பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் எனது பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் வாசித்துக் கணக்கிட்டுக்கொள்வேன்.

०६.தமிழ் சினிமா இசை?
இசைப்புயலின் ரசிகன் நான். அலுவலகத்தில்கூட இவரது பாடல்களை தான் அதிகம் நேசிப்பேன். தனிமையில் இருக்கும்பொழுதுகளில் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இசையை மட்டும் (பின்னணிக் குரல் தவிர்த்து) கேட்பது வழக்கம். குறிப்பாக மார்கழிப்பூவே, என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய், ஓ பட்டர் ஃப்ளை ( இன்னும் உண்டு) அதிகம் பிடிக்கும்.
வேறு இசை அல்பங்களை தழுவி நமது இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல் என அடிக்கடி செய்திகள் வரும்போது அவற்றையும் விட்டுவைக்காமல் படித்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

०७.தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? ஆதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தி,ஆங்கிலத் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. வீட்டில் நேரம்கிடைக்கும்போது. ஓம்காரா படம் அரசியலின் அந்தரங்கங்களை வெளிக்கொணருவதாக இருந்தது.இந்தப்படத்தைப் பார்த்து மிக அதிகமாக யோசித்தது நினைவிருக்கிறது.
பேய்க்கதைகள்,பழங்கால யுத்தம் தொடர்புடைய ஆங்கிலப்படங்களை விடிய விடிய பார்ப்பதும் உண்டு. டிரகன் ஹார்ட், த ஷெடோ போன்றவற்றை விரும்பி ரசித்தேன் (இன்னும் உண்டு).

०८.தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
மேடை நாடகங்களைப் போன்றளவு தமிழ் சினிமாவுடன் எனக்கு நேரடித் தொடர்பு எதுவும் இல்லை( அதனால் மற்றைய கேள்விகளுக்கு பதிலும் என்னிடத்தில் இல்லை)

१०।தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எமது தாய்மொழியை தனித்துவமாக பேணும் சினிமா தொடர்ந்தும் நிலைக்குமானால் சிறந்தது. சந்ததியினருக்கு தவறான வழிகாட்டுதல்களை அளிக்கும் எந்தவொரு சினிமாவும் தன்துறைக்கோ சமுதாயத்துக்கோ பங்குவகித்து நிலைக்கப்போவதில்லை. பின்னிலையான கலாசாரத்தலுவல்கள் தவிர்க்கப்பட்டு வளரும் சினிமா உயர்தரத்தைப் பெறும். இன்றுமட்டுமல்ல எதிர்காலத்திலும்.
சினிமா குறிப்பிடத்தக்களவு வாழ்க்கையின் சிறுபுள்ளியளவாயினும் இணைந்துள்ளது எனலாம்। சினிமா பற்றிய எதுவுமே இல்லையென்றால் என்னைப்பொருத்தவரையில் பெரிதான மாற்றம் இல்லாவிடினும் கவலை உண்டு. எனினும் காலமாற்றம் மாற்றிவிடக்கூடும்.


இந்த சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு நான் அழைக்கும் என் அன்பு நண்பர்கள்:
ஊரோடி பகீ
லோஷன்
சிவலிங்கம் சிவகுமாரன்
ஹொங்கொங் ஈழவன் எச்.கே.அருண்
ஹேமா
மாரி மகேந்திரன்

விரிவாக படிக்க ……..

இந்தப் பசுவுக்கு என்ன நடந்திருக்கும் என யாராவது சொல்ல முடியுமா?

விரிவாக படிக்க ……..

அதிகம் கோபம் கொள்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்


அளவுக்கு அதிகமான கோபத்தால் சில சந்தர்ப்பங்களில் முக்கியமான பலவற்றை இழந்திருப்போம்.அல்லது கோபத்தை தவிர்க்க முடியாமல் எம்மை நாமே துன்புறுத்திக்கொண்டிருப்போம்.
இவற்றைத் தவிர்க்க சில வழிகள்:

01. கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுங்கள்- சூழ்நிலையைத் தவிர்க்கும்போது கோபம் தணியும்

02. ஒரு கப் தண்ணீர் அருந்துங்கள் - குளிர்மையான தண்ணீர் மாற்றத்தை ஏற்படுத்தும்

03. கண்ணாடியைப் பாருங்கள். உங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு ஆறுதல் அடைவீர்கள்

04. ஆறுதலாக கண்மூடி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் - ஆழமான சுவாசம் ஆசுவாசப்படுத்தும்

05. மென்மையான இசை கேளுங்கள் - இசை கோபத்தைக் குறைத்து சாந்தப்படுத்தும்

06. கண்ணை மூடி உங்களுக்குப் பிடித்த பெரியோரின் முதுமொழி ஒன்றை மனதுக்குள் சொல்லுங்கள் - மனம் மாற வழிவகுக்கும்

07. இயற்கை அழகுடனான இடம் அருகில் இருந்தால் அங்கு உங்கள் தனிமையை போக்குங்கள் - இயற்கை சாந்தத்துக்கு நல்ல மருந்து

08. கோபத்துக்கான அடிப்படைக் காரணத்தையும் அதற்கான தீர்வினையும் மனச்சாட்சியுடன் கதையுங்கள் - நியாயம், கோபத்தை அடக்க நல்ல தீர்வு தரும்


இன்னும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்....

விரிவாக படிக்க ……..

உனக்கான இருப்பு !



உனக்கான
உனக்கேயான
இருப்பும் இடமும்
ஒளியூட்டப்படாமல் இருக்கிறது !

உன்
பிரிவினூடான
ஒவ்வொரு பயணங்களிலும்
அழத்துடித்து
அடங்கிப்போகும்
என்
மனதையும் மையங்களையும் …

உன்
களிப்புகளுக்கிடையில்
உறைந்து ஊனமாகும்
என்
எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும் …

உன்
மென்மொழிகளில்
மௌனம் காக்கும்
என்
ஊமை நினைவுகளின்
அடையாளங்களையும்
ஆத்மார்த்தங்களையும் …


தவிர்க்கவே எண்ணி
தருணம் பார்த்து
தவறாமல் காத்து நின்ற
பொழுதுகளையும்
இருத்தலையும் …

இமைக்கூடங்களில்
சிறையிருக்கும்
கடைசிப் பார்வையையும்
உணர்பாசத்தையும் …

வார்த்தை கோர்த்து
எழுதித் திரித்து
உனக்கான என் இருப்பில்
வைத்திருக்கிறேன் !

தனியறையில்
தவம்கிடக்கின்றன
என் கவிதைகள்
காலத்தோடான அத்தனை நினைவுகளையும்
ஏந்திச் சுமந்தபடி !

ஒன்றும் வேண்டாம்
உன்
கண்களின் வெளிச்சம் கொடு !

அந்த இருட்டறையில்
நீள் வெளியாய் நிறைந்திருக்கும்
வெண்காகிதங்களில்
உன்
பெயர்மட்டும் ஜொலிக்கப்பார்க்க
ஆசை எனக்கு !


-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை

விரிவாக படிக்க ……..

கனவில் எழுதிய கவிதை!



அதுஒரு நிலாப்பொழுது

தனக்கு எட்டிய தூரம்வரை வெண்ணொளிபாய்ச்சி
வெள்ளிமழையில் உலகத்தை நனைத்துக்கொண்டிருந்தது நிலவு.

இரவுதேவதை முழு உலகத்தையுமே ஆட்கொண்டு
மயான அமைதி நிலவிக்கொண்டிருந்தது.

அந்தி மஞ்சளைக் குழைத்து
மல்லிகை மணத்துடன் செய்யப்பட்ட
தங்கச்சிலையாய் வந்து நிற்கிறாய்.

ஒற்றைப்பார்வையில் இலேசாக இதழ்விரித்து நீ புன்னகை பூக்கையில்
அதனை முழுமையாக உள்வாங்கிய என் உயிர்
இரகசியமாக அதனை உணரத் தொடங்கியது.

தங்கப்பட்டாடை அணிந்த வெள்ளை ரோஜாவாய் கன்னம்சிவக்க நடந்துவந்தாய்.

அருகில் வருகிறாய்.
என் சுவாசம் முழுவதும் உன் வாசம்.

உன் சுவர்ணத்தொடுகைக்காக காத்திருக்கிறேன்.

அழகுதேவதையின் சிங்காரமான கட்டழகு
என் அத்தனை பலத்தையும் கட்டவிழ்த்துப்போட்டது.

ஜன்னல் நிலவொளியில்
வெள்ளித் தகடாய் ஜொலித்த நீ
மின்மினியாய் கண்சிமிட்டிச் செய்த சமிக்ஞைகள்
ஆழ்ந்த இன்பத்துக்கு அத்திவாரமிட்டன.



இந்த பூமியே சிதறிப்போனாலும் உன்னைமட்டும் என்னிலிருந்து விலகாமல்காப்பேன்
என என் மனது உள்மனச்சாட்சியிடம் உறுதிபூண்டுகொண்டது.

மேகத்தை ஒன்றுதிரட்டி செதுக்கிய ஆதர்ஷனச் சித்திரம்போல அருகில் வந்து என்
கண்களைப் பார்க்கிறாய்.

இரட்டிப்புக் களிப்பில் இனியவளை கரம்பிடிக்க முனைகையில்
கைகளுக்குள் போர்வையின் நுனி!

இரவுவரும்
அதே நிலவும் வரும்
நீ வருவாயா?

-கனவுகளின் வரிகளுடன்
இறக்குவானை நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

மரணத்தோடு விளையாட்டு ! (வீடியோ)



விரிவாக படிக்க ……..

என்னைத் தொலைத்த நான்..!



மெழுகுவர்த்தியில் அவள்
முகம்பார்த்துப் பின்
பேனை பிடித்து – அந்த
மனோகரத்தை வரையும்
வேலையில்லாதவன் நான் ..!

கண்திரை மூடும்போதும்
நித்திரை வேண்டாமென
நித்தம் உன்
நினைவில் வாடிய
ஜீவனில்லா ஜடம் நான் ..!


அல்லிப்பூவின் இதழ்கொண்டு
வெள்ளைமணலில் பெயர்செதுக்கி
கடலைத்தூற்றி
கரையை அணைத்த
பைத்தியக்காரன் நான் ..!

மனோகரத் தோற்றத்துக்கு
மணிமணியாய் வார்த்தை தேடி
தமிழில் வார்த்தை கொஞ்சம் என
ஒருவரியில் பொய்சொன்ன
பொல்லாதவன் நான் ..!

துணையாய் இருப்பாயென நம்பி
தோள்கொடுத்த
தோழனை தூக்கியெறிந்து
தனிமையில் தவித்த
துரதிர்ஷ்டசாலி நான் ..!

நெஞ்சம் செய்யும்
கபளீகரத்தில்
தாயின் நெருடலை
தொல்லையென்றொதுக்கிய
துர்மனக்காரன் நான் ..!

மொத்தத்தில்
காதலுக்காக
வாழ்வை இழந்து
காதலிக்காக
என்னை இழந்த
உதாரணவாதி நான் ..!



-இராமானுஜம் நிர்ஷன்
இறக்குவானை.

விரிவாக படிக்க ……..

நினைவுகளின் சுவடுகள்…!

அந்த இடம் எப்படியிருக்கும்? எல்லாவற்றுக்கும் எவ்வாறு முகம்கொடுப்பது? எவ்வாறு சமாளிப்பது? யார் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்?
காய்ச்சல் என்றால்… தலைவலியென்றால்…
இப்படி ஆயிரம் எண்ணவோட்டங்கள் மனதுக்குள்.

அன்று 2002.10.27. உறவினர்கள் நண்பர்களிடம் விடைபெற்று மனதோடு மட்டும் கதைத்துக்கொண்டிருக்கிறேன்.

வெறிச்சோடிக்கிடந்தது வீடு. ஏன் என் மனதும்கூடத் தான். மலையோரப் பகுதி என்பதால் தென்றலின் அரவணைப்பில் எப்போதும் வீடு சில்லிட்டிருக்கும். சோகங்களைக் கூட சுகமாய் அனுபவிக்க வைக்கும் அந்தத் தென்றல் கூட அன்று சூடாய்ப் பட்டது.
அம்மாவின் முகத்தில் இனம்புரியாத சோகம். அடிக்கடி என்னை வந்து பார்ப்பதுமாய் போவதுமாய் இருந்தாள். விடியல் இல்லாத இரவாய் அந்த நாள் இருந்துவிடக்கூடாதா? எனக்கு போகப்பிடிக்கவில்லை என்று சொல்லிவிடுவதா? பயமாயிருக்கிறது என்று சொல்ல முடியுமா? என்ற அபரிதமான எண்ணங்களும் மனதில் உதித்தன.

நிறைந்த கணமான நினைவுகளுடனும் அச்சம் கலந்த ஏக்கத்துடனும் அன்றைய நாள் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. உலகை இருள் ஆட்டிப்படைக்க இருளை நிசப்தம் தன்வப்படுத்தியிருந்தது. எனினும் வீட்டின் கடிகார முள் மட்டும் நிமிடத்துக்கு நிமிடம் நிசப்தத்தைக் களைத்து என் உயிரையும் தட்டிவிட்டுக்கொண்டிருந்தது.

அடிக்கடி எழுந்து பார்த்தபோதெல்லாம். அம்மாவும் என்னருகில்... உறங்காமல்…

அதிகாலை 2.45. அம்மாவின் சுமையான குரல் என்னை எழுப்பிவிட்டது.

அதற்குள் விடிந்துவிட்டதா?
அம்மாவின் முகத்தைப் பார்க்க முடியாதவனாய் எழுந்துசெல்கிறேன்.
அப்பாவும் ஏதோ யோசித்த வண்ணம் சாலையில் உட்கார்ந்திருக்கிறார்.

கடன்களை முடித்துக் குளித்தபோது கண்ணீர் வழிந்து தண்ணீரோடு கரைந்து சென்றது.

நான் ஆயத்தமாகிவிட்டேன். அப்பா வாங்கித்தந்த உடை என்னை திடகாத்திரமாக காட்டியபோதும் மனது இன்னும் விடலைப் பக்குவத்திலேயே இருந்தது. என்னைத் தேற்றிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தபோது அம்மா கணத்த பையைத் தந்தார். ஒரு மாதத்துக்குத் தேவையான உடை,சவர்க்காரம்,சீப்பு, எண்ணெய், ஊசி என அனைத்துமே இருந்தன.

எனக்குப் பிடித்த கறிவகைகளைச் சொல்லி “பிடிச்ச எல்லாமே சமைச்சு வச்சிருக்கிருக்கிறேன். மத்தியானத்தில் சாப்பிடுங்க” என்று முதல்நாள் இரவுக்குப் பிறகு இரண்டாவது வசனத்தைப் பேசினாள் அம்மா.

எப்படியிருக்க வேண்டும். எப்படிப் பழக வேண்டும். ஒவ்வொருவரும் வித்தியாசமானவர்கள். எல்லாவற்றிலும் கவனம் தேவை. மேற்படிப்பு அவசியமானது. கவலைகள் வேண்டாம். பஸ்ஸில் மிதிபலகையில் செல்லவேண்டாம், யாருடனும் சண்டை போடக்கூடாது, கோயிலுக்கு அவசியமாக போக வேண்டும் என ஏகப்பட்ட விடயங்களை ஒரே மூச்சில் சொல்லி முடித்தார் அம்மா.

கடைக்குப் போகும்போது கூட அம்மா அப்பாவின் காலில் விழுந்துவணங்கிச்செல்லும் வழக்கம் எனக்கு உண்டு. அப்போது ஏற்படாத பதற்றம் அன்று எனக்கிருந்தது. அம்மாவின் பாதங்களில் விழுந்து வணங்கியபோது கண்ணீர் வடிந்தது. சுமார் இரண்டரை நிமிடம் வரை காலடியில் எழமுடியாமல் இருந்தபோது அம்மாவின் நடுங்கிய கரங்களால் என்னைத் தூக்கிகிவிட்டு கட்டியணைத்துக்கொண்டபோது அம்மா அழுத விதம் இன்னும் நினைவில் இருக்கிறது.

ஏன் நான் போகவேண்டும்? வீட்டிலேயே இருந்துவிடலாமே என உள்மனது சொல்ல அதனை அழுகையால் கட்டுப்படுத்தி அம்மாவின் அணைப்பிலிருந்து என்னைத் தவிர்த்து திரும்பியபோது அப்பா என் முகம்பார்க்க முடியாதவராய் அழுதுகொண்டிருந்தார்.

வார்த்தையில்லை. வேகமும் இல்லை. அப்பாவிடம் எப்படி விடைபெற்றேன் என்றே தெரியவில்லை. அதுவரை கதைக்காதவர் "கவனமாய் இருக்கனும் மகன்" என்று மட்டும் சொல்லி நிறுத்திவிட்டார்.

4.15 மணிக்கு பஸ் புறப்படும்.

அவசரமாய்ச் செல்ல வேண்டும் என்பதால் முற்றத்து மல்லிகைச் செடியிடம் ஒரு பூவைக் கடன் வாங்கி கைக்குள் அடக்கிக்கொண்டு வீட்டை முழுவதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினேன்.
அம்மா அப்போதும் அழுதுகொண்டிருந்தார்.

அப்பாவுடன் பஸ்நிலையத்துக்கு நடந்துவரும்போது நான் படித்த பரியோவான் பாடசாலை, மாரியம்மன் கோயில்,ரீச்சர் வீடு என எல்லாமே என் பழைய நினைவுகளை மீட்டி விடைகொடுப்பதாய் உணர்கிறேன்.

பஸ் வண்டி புறப்படுகிறது. இருளாய் இருந்த போதும் முடிந்தவரையில் ஊரை முழுமையாக பார்க்க எத்தனித்து அப்பாவின் சோர்ந்த முகத்தைப் பார்த்தவனாய் விடைபெறுகிறேன்.

அம்மாவிடம் பிடித்த சண்டைகள், அப்பாவுடன் கோபப்பட்ட விதம், குறும்பு விளையாட்டு, நண்பர்களின் அரட்டை, பள்ளிக்காலம், கோயில் விழாக்கள், விளையாடியது, விழுந்தது,மேடை நாடகங்கள்,கவிதைப்பரிசு என எல்லாமே ஒருகணம் மனதில் நிறைந்து மறைந்துபோகின்றன.

அப்போதைய பயணமும் வாழ்க்கைப் பயணமும் ஒன்றுதான் என தேற்றியவாறு நேற்றைய களைப்பில் தூங்கிப்போகிறேன்.
மீண்டும் விழித்தபோது கதிரவனின் உதயம் என் கண்கூசச் செய்தது.

ஆம் ! நான் வேலைக்குப் போகிறேன்.
என் இலட்சியத்துக்காக நான் கொழும்புக்குப் போகிறேன் என்ற உணர்வு அப்போதுதான் என்னைத் தட்டியெழுப்பியது போன்று உணர்ந்தேன். அண்ணா அங்கு இருக்கிறார் என்ற ஆறுதல் என்னை கொழும்பு வரை கூட்டிவந்தது.

-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை

விரிவாக படிக்க ……..

மீண்டும் உயிர்த்தெழுகிறேன் !

மனதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி. உயிரில் கலந்திருக்கும் தமிழார்வம் மேலும் பிரவாகப்பட்டு நெஞ்சுநிமிரச்செய்தது போன்ற புத்துணர்ச்சி. இதுவரைக்கால கபளீகரத்துக்கு விடைகொடுத்து ஆரிடை நடைதேடும் இலட்சிய வேகம் என்பவற்றுடன் புதிய பக்கத்தில் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்.
இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தது முதல் பல பிரச்சினைகள் உருவெடுத்தபோதும் என் சுயஆக்கங்களை எழுதிவந்தேன். தற்போது கட்டாரில் வசிக்கும் இறக்குவானை மண்ணின் சிறந்த தமிழார்வலர்களில் ஒருவரான நண்பர் விக்கி எனது வலைத்தளத்தை மேலும் மெருகேற்றித்தருவதாக உறுதியளித்து செய்துதந்தார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு மாதகாலத்துக்கும் அதிகமாக எதனையும் எழுத முடியவில்லை. மாமா, மாமி இருவரும் அடுத்தடுத்த மாதங்களில் இறையடி சேர்ந்தமை, நான் பெரிதும் நேசித்த கையடக்கத் தொலைபேசி களவாடப்பட்டமை, சில அரசியல்வாதிகளின் உட்பூசல் எதிர்விளைவுகள், அலுவலக வேலைப்பளு, வீட்டு வேலைகள் என்பவற்றால் இணையத்தில் நேரம் செலவுசெய்ய முடியாதிருந்தது.
வலைத்தளம் மீளமைக்கப்பட்டதில் எனது அறிமுகப்பதிவு உள்ளிட்ட பல பதிவுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. வருந்துகிறேன்.
தொடர்ந்தும் தரமான ஆக்கங்களை தரமுயற்சிக்கிறேன்.எனது புதியமலையகம் http://puthiyamalayagam.blogspot.com/ வலைத்தளத்திலும் தொடர்ந்தும் எழுதத் தலைப்படுகிறேன்.
இந்தக் குறுகிய காலத்தில் என்னோடு ஒத்தாசைபுரிந்து தோள்கொடுத்து துன்பம் தீர்த்த அனைத்து நண்பர்ளுக்கும் நன்றிபகிர்கிறேன்.

'வாழ்தலை சாதல் நிறுத்தச்செய்யினும்
சாதலால் வாழ்ந்ததை உரைக்கச்செய்வோம்.

-அன்போடு
இறக்குவானை நிர்ஷன்

விரிவாக படிக்க ……..

திருக்குறள்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம் பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும் மயிலப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது. இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

திருவள்ளுவரை நாயனார் தேவர்இ தெய்வப்புலவர்இ பெருநாவலர்இ பொய்யில் புலவர் என்றும் சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்தவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர். பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.


1. எட்டுத்தொகை பத்ததுப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு.
2. பதினென்கீழ்க்கணக்கு.
3. ஐம்பெருங்காப்பியங்கள்
4. ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகியவை அவை.


அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்’’ என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம்;இ பொருள்இ இன்பம்’’ ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்’’ எனப் பெயர்பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்’’ என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துப்பாடல்களைக் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்மே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களாலாகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.


குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’’ என்றும் “திருக்குறள்’’ என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்’’ என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்’’ வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது “கடவுள் வாழ்த்து’’ என்னும் அதிகாரம். தொடர்ந்து வான்சிறப்பு, நீத்தார் பெருமைஇ அறன்வலியுறுத்தல் ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் இல்லறவில் என்னும் இயலில் 25 அதிகாரங்கள். அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.


அடுத்துவரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல், ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகார்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும் ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பாலில் இரண்டு இயல்கள் உள்ளன. களவியலில் 7 அதிகாரங்களும்இ கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்இ 133 அதிகாரங்கள்இ 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு


என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ’’வில் ஆரம்பித்து 1330ம் குறளாகிய


ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்


ஏன்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்’’ னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால் அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர். திருக்குறள் முப்பால் உத்தரவேதம்இ தெய்வநூல்இ பொதுமறைஇ பொய்யாமொழி, வாயுறை வாழ்த்துஇ தமிழ் மறைஇ திருவள்ளுவம் என்ற பெயர்களும் அதற்குரியவை.


பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ்வாய்ந்ததாக விளங்குவதும்இ அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப்படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.


தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு. அதற்கு துணையாக உள்ளது பொருளியல்வாழ்வு. அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன். மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம். அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழவேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச்செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய
தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.


உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்



விரிவாக படிக்க ……..

எம்மை விட்டுப் பிரிந்த தமிழ்ப் பொக்கிஷம் தங்கம்மா அப்பாக்குட்டியின் நினைவாக



நான் ரொம்பச் சிறியவனாக இருந்த காலத்திலிருந்து என்னை வழிநடத்தவேண்டும் என்று சிரமப்பட்டவர்களில் முகுந்தன் அண்ணாவும் ஒருவர்। யாழ் மண்ணின் மைந்தராகிலும் மலையக ஆலயங்களுக்கும் அறநெறிப்பாடசாலைகளுக்கும் அவர் ஆற்றிய பங்கு சொல்லில் அடங்காதது।

ஏராளமான சமய,தமிழ் நூல்களை எனக்குத் தந்து சமயப்பணியில் ஈடுபடவைத்தவர் அவர்। நீண்டகாலமாக பிரிந்திருக்கும்போதும் முகுந்தன் அண்ணாவின் உதவிகளையும் அறிவுரைகளையும் என்றும் மறக்கமுடியாதவனா இருக்கிறேன்।( இன்னும் நிறைய கூறலாம்)।ஈழமே மனதால் அழுத நாள் சைவச்செம்மல் தங்கம்மா அப்பாக்குட்டியின் இறப்பு। அவரைப்பற்றி பதிவெழுதாமைக்கு காரணத்தை முகுந்தன் அண்ணா வினவியிருந்தார்। அப்போது எனது மாணவர்களுக்காக அம்மையார் பற்றிய பல தகவல்களை நான் திரட்டிக்கொண்டிருந்தேன்। அம்மையாரைப் பற்றி எழுதவேண்டும் என்று பல நாட்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் தகவல்பல திரட்ட தாமதமானது। இந்நிலையில் முகுந்தன் அண்ணா அம்மாவைப்பற்றி எழுதிய கட்டுரை ஒன்று எனக்குக் கிடைத்தது। அதனை இங்கு தருகிறேன்।
தன்னைப் போலச் சகலமும் ஓம்புக
விண்ணைப் போல வியாபகமாகுக
கண்ணைப் போலக் காக்க அறத்தை – யோகர் சுவாமிகள்

துர்க்காதுரந்தரி, சிவத்தமிழ்ச்செல்வி, திருவாசகக் கொண்டல், பண்டிதை, செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள் அம்பிகையின் பாதாரவிந்தங்களை இறுகப்பற்றிப் பிறவாத பேரின்பமுத்தியடைந்தார் என்ற செய்தியறிந்து தாயினைப் பிரிந்த கன்றினைப்போல சொல்லமுடியாதளவு பிரிவுத்துயர் கொண்டேன்;. நல்லூர் சிவயோக சுவாமிகள் கூறிய எப்பவோ முடிந்த காரியம் ஒரு பொல்லாப்பும் இல்லை முழுதும் உண்மை நாமறியோம் என்ற நான்கு மகாவாக்கியங்களின் பொருளை உணர்ந்து – நமக்குள் நாமே எம்மைத் தேற்றி அன்னாருடைய பூதவுடலுக்கு அஞ்சலி செய்ய முடியாது கடல் கடந்து சுவிற்சலாந்து தேசத்தில் வாழும்நிலையில் எம்மனக்கண்முன்னே புன்முறுவல் பூத்த அம்மையாருடைய புகழுடம்புக்கு நான் அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். அடியேன் கடந்த 30 வருடங்களுக்கு மேற்பட்டகாலம் அம்மையாருடன் தொடர்பு கொண்டிருந்ததை இந்தநேரத்தில் மீட்டுப் பார்த்து-அதனை வெளிப்படுத்த வேண்டியவனாக இருக்கின்றேன்.

1977ம் ஆண்டு கடைசிக் காலங்களில் நாம் தெல்லிப்பழை ஸ்ரீ காசிவிநாயகர் ஆலயத்திற்குப் பக்கத்தில் குடிவந்த காலங்களில் காசிப்பிள்ளையாரிடமும் துர்க்காதேவியம்பாளிடமும் தினமும் சென்று வழிபட்டு வருவதுடன் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபட்டுவந்தேன். துர்க்கையம்பாள் ஆலயத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமை மாலையிலும் அடுத்தநாள் செவ்வாய்க்கிழமை விசேட பூசைகளுக்காக பல தொண்டுகள் செய்துவந்தோம். அம்மையாரை நாம் எல்லாரும் ரீச்சர் என்றே பாசமாக அன்புபாராட்டி அழைத்து வந்தோம். ஆலயத்தை மிகவும் உன்னத நிலைக்கு இன்று கொண்டுவந்த அவரது அயராத உழைப்பை - அன்னை அம்பிகையிடம் தன்னை அர்ப்பணித்த பாங்கை எடுத்துரைக்கச் சொல்லால் முடியாது. இராச கோபுரம் – சித்திரத்தேர் - தீர்த்தத்தடாகம் அன்னதான மடம் கல்யாண மண்டபம் மட்டுமல்ல அம்பிகையின் அழகிய திருவுருவச் சிலை வார்ப்பு, இன்று கணீரென ஒலித்துக் கொண்டிருக்கும் கண்டாமணி வார்ப்பு – சைவ சித்தாந்த திருமுறை மாநாடு – சண்டிமகாஹோமம் என்பவற்றைத் திறம்பட நடாத்தி முடித்ததும் ஹரிதாஸ்கிரி சுவாமிகள், திருமுருக கிருபானந்தவாரியார் ஆகியோரைத் தரிசிக்கும் பேறு எமக்குக் கிடைத்ததும் அன்னையுடைய அளப்பரிய அடக்கமான சேவையினால் என்றால் மிகையாகாது.

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் வீ. தர்மலிங்கம்; அவர்கள் தனியாக ஆலயத்திற்கு வருகைதந்துவிட்டு வீடு செல்லும்போது(அவர் நிர்வாக சபையில் இருந்தாரா என்பதை நான் சரியாக தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் அடிக்கடி அவர் அங்கு வருவதைக் கண்டிருக்கின்றேன்) நான் அவரது வாகனத்தில் கோவிலிலிருந்து மில்க்வைற் அதிபர் சிவதர்மவள்ளல் மறைந்த க. கனகராசா அவர்களிடம் போவது வழக்கம். அவரும் அவரது துணைவியாரும் அடிக்கடி ஆலயத்திற்கு வந்துபோவதுண்டு. எனது பெரிய தந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களும் குடும்பத்துடன் ஆலய வழிபாடு செய்யப் போகும்போது நானும் போவதுண்டு. ஆலயத்தில் வசந்தமண்டபத்திலும் தெற்குவாசலிலும் அடிக்கடி தேவாரம் பாடும்பணி எனக்குக் கிடைப்பதுண்டு. செவ்வாய்க்கிழமை மாலையில் வசந்த மண்டப பூசைகளின் பின்னர் தினமும் ரீச்சருடைய அருளுரை இடம்பெறும். அரனையும் அறத்தையும் வலியுறுத்தும் அப்பேச்சுக்கள் மன அழுக்குகளை நீக்கப் பெரிதும் உதவின. அதன்பின் சிலவேளைகளில் ரீச்சர் என்னைத் தேவாரம்பாடும்படி சொல்லிவிட்டு வேறு அவசிய தேவைகளுக்காக அலுவலகத்திற்குச் சென்றுவிடுவதுண்டு.

ஆலயத்தின் தேவைகளுக்காக கொழும்பிலிருக்கும் அடியார்களுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள நாமிருந்த அலுவலகத்திற்கு வருகைதந்து நீண்ட நேரம் காத்திருந்து அனைவருடனும் தொலைபேசியில் பேசி தனது பணிகளைச் செம்மையாகச் செய்த பெருந்தகை அவர். ஏனெனில் அன்றைய நிலையில் தொலைபேசி ஆலயத்திற்கு அண்மையில் எமது காரியாலயத்தில் மாத்திரம் இருந்தது.

மகாஜனாவின் உனை நீ அறி என்ற கல்லூரி வாசகமும், காசிப்பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் மறைந்த கணேசலிங்கக்குருக்கள்ஐயா, ம. சி. சிதம்பரப்பிள்ளை, ஆசிரியர் விநாயகரத்தினம், ஆசிரியை கலாதேவி போன்றோரது தொடர்பும்; நான் சமயப் பணியில் ஈடுபட பெரிதும் உதவின. குறிப்பாக கீரிமலைச் சிவநெறிக் கழகம் நடத்திய கதாப்பிரசங்கப் போட்டிகளுக்காக என்னைத் தயார்படுத்திய பெருமை இப்பெரியார்களுக்கே உண்டு. ரீச்சர் காசிப் பிள்ளையார் கோவிற் பணிகளிலும் பாலர் ஞானோதய சபையுடனும் பெரிதும் தொடர்புபட்டிருந்தார்.

1985ல் எமது மூளாய் இந்து இளைஞர் மன்றத் திறப்புவிழாவுக்கு ரீச்சர் வருகைதந்தது மட்டுமல்ல பலதடவைகள் எமது பிள்ளையார் கோவிலுக்கும் வந்து சொற்பொழிவாற்றி எமக்கு நல்லறிவும் தெளிவும் தந்தார்.

சுன்னாகம் திருமகள் அச்சகத்தைப் பொறுப்பெடுத்து பெரிய புராண வசனச் சுருக்கத்தை மறுபிரசுரம் செய்த பெருமை ரீச்சருக்குண்டு.

ஆலயத்தின் நகைகளும் பெறுமதிமிக்க பொருட்களும் கொள்ளையிடப்பட்டபோதும்;, வசந்த மண்டபத்திற்கு அருகிலுள்ள களஞ்சிய அறை படையினரின் எறிகணைத் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்த பொழுதும், மனவுறுதியுடன் எல்லாம் அவளே பார்த்துக் கொள்வாள் என்று எமக்கு ஆறுதல் சொல்லித் தேற்றிய மனதிடத்தை நினைவிற்கொள்ளவேண்டும். களவுபோன நகைகள் மீள வந்ததே அம்பாளின் அனுக்கிரகம் என்பதை விட ரீச்சரின் அருள்வாக்கு என்றால் மிகையாகாது. ஏனெனில் அம்பாள் வேறு ரீச்சர் வேறாக என்னால் கருத முடியவில்லை. காரணம் ஏற்கனவே சொன்னதுபோல தன்னை அறிந்தால் அது நீயாகிறாய் என்னும் தத்வமஸி என்ற உண்மை புலப்படும்.

நாட்டின் அனர்த்தங்களினால் நாம் இடம்பெயர்ந்து கொழும்பிலிருந்தபோது அங்கு வருகைதரும்போதும் நாம் அம்மையாரைச் சந்தித்து வந்ததுண்டு(திரு. எஸ். கே. பொன்னம்பலம் அவர்கள் வீட்டில்). ரீச்சருடைய பிறந்த நாள் ஒன்றுக்கு கொழும்பிலிருந்து கூட்டணித்தலைவர் மு. சிவசிதம்பரம்;, அ. தங்கத்துரை, வீ. ஆனந்தசங்கரி, மாவை. சேனாதிராசா ஆகியோருடன் நானும் ஒரு வாழ்த்துக் கடிதம் கையொப்பமிட்டு அனுப்பியிருந்தோம். அதற்கு நன்றி தெரிவித்து ரீச்சர் பதிற் கடிதம் எழுதியிருந்தார். கடிதமோ, பணமோ எது வரினும் அவர்களுக்கு உடனுக்குடன் பதில் எழுதும் வழக்கம் கொண்டிருந்தார். (இதனை மிகவும் அழகாக ரீச்சருடைய இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட நீதிபதி. ஆர் ரி. விக்னராஜா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.)

1997ல் யாழ் மாநகர சபைத் தேர்தல் பணிகளுக்காக யாழ் வந்த சமயம் அம்மையாரைத் தரிசிக்க ஆலயத்துக்கு வந்தவேளையில் என்னை அந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று கூறியதற்கு அமைய நான் தேர்தலில் போட்டியிடாது அவரது கட்டளைக்கு அடிபணிந்து நடந்துகொண்டேன். அதன்பின் முதல்வர் சரோஜினி யோகேஸ்வரனின் அகாலமரணத்தின்பின்னர் மாநகர சபையை நடாத்த எவருமில்லாதபோது நாம் மறைந்த முதல்வர் சிவபாலன் மற்றும் இரவிராஜ் அவர்களுடன் சேர்ந்து போய் சந்தித்தபோது நான் உறுப்பினராக வரவிருப்பதை அவருக்கும் தெரிவித்து அவரது ஒப்புதலுடன் மாநகர சபை உறுப்பினரானேன். எனது திருமணத்தை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நடத்த தீர்மானித்தபோது அன்றைய நாளில் வேறோரு திருமணம் நடக்க இருந்தபடியால் நல்லூர் துர்க்காமணிமண்டபத்தில் நடத்த ஒழுங்குசெய்து தந்ததுடன் எனது திருமணநாளன்று முழுநேரமும் நல்லூரில் வந்து நின்று எம்மை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியதை எப்படி என் வாழ்நாளில் மறக்கமுடியும். எமது கட்சித் தலைவர்கள் வீ. ஆனந்தசங்கரி, இரா. சம்பந்தன்;, ந. இரவிராஜ் ஆகியோருடனும் துர்க்காபுரம்போய் அம்மையாரைச் சந்தித்ததையும் இவ்விடத்தில் நினைவுபடுத்துவது நல்லது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் தெல்லிப்பழை ப.நோ. கூ. சுங்கத் தலைவருமான சிவமகாராசா அவர்களும் ஆலயத்துடனும் ரீச்சருடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தமை
யாவரும் அறிந்ததே.

தழிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் மறைந்த தந்தை செல்வா, ஜீ. ஜீ பொன்னம்பலம் ஆகியோர் மீதும் பெரும்மதிப்ப வைத்திருந்த ரீச்சர் அவர்கள் மறைந்த குமார் பொன்னம்பலம் அவர்களது நினைவாக வெளியிடப்பட்ட நினைவு நூலிலும், எனது பெரியதந்தையார் மறைந்த அ. அமிர்தலிங்கம் அவர்களுடைய நினைவு மலரிலும் தனது செய்தியை தெரிவித்திருப்பதையும் நான் குறிப்பிடவேண்டும்.

கடந்த ஞாயிறு 15.06.2008 காலையில் அதாவது அவர் உயிர்பிரிந்த நாளில் நானும் இலண்டனில் வசிக்கும் எனது பெரிய தாயாரும் (திருமதி. மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்) ரீச்சரைப்பற்றிப் பேசியிருந்தோம். தனக்கு சிவத்திரு. சிவபாலன் அவர்கள் கோவில் பிரசாதம் அனுப்பியிருந்ததாகவும் அதில் ரீச்சருடைய உடல்நிலை பற்றி எழுதப்பட்ட கடிதத்தில் தம்பி முகுந்தனுக்கும் அறிவிக்கவும் அவர்தான் எம்மை உங்களுக்கு அறிமுகம் செய்தார் என்றும் குறிப்பிட்டதாகத் தெரிவித்திருந்தா. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 30வருடங்களாக சிவத்திரு. சிவபாலன் அவர்களையும் ரீச்சரைச்சந்தித்த காலத்திலிருந்தே தெரியும். நாமனைவரும் ஒரு குடும்பமாக – ஆத்மீகத்தில் - அன்பில் - தொண்டில் மானசீகமான பக்தித் தொடர்பில் பிணைக்கப்பட்டிருந்தோம். அம்மையார் ஈழநாட்டின் நாவலருக்கு அடுத்த ஆறாம் சமயகுரவராகப் போற்றப்பட வேண்டிய பெருமைக்குரியவர். அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வரும் பெண்ணடியார்கள் மூவரையொத்த பெரும்பணியாற்றியவர். நமது நாட்டில் மாத்திரமல்ல பல வெளிநாடுகளுக்கும் சென்று தமிழ்ப்பணியும் சமயப்பணியும் புரிந்த பெருமைக்குரியவர். அனைவருடனும் எளிமையாகவும், புன்முறுவல் பூத்தமுகமுடையவராய் அன்பொழுகப் பேசி அனைவரது நெஞ்சங்களிலும் என்றும் நீங்காமல் உறைகின்ற பெருமையுடையவர். செல்லும் அனைவருக்கும் போதும் போதும் என வயிறாரச் சோறு போட்ட பெருமையுமுடையவர்.

அன்னாரைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவுக்கு எம்முடன் பாசத்தில் பிணைந்திருந்தார். அவரது பணிகளைப்பற்றி பலரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தான் எங்கே வேறு இடங்களுக்குச் சென்றால் தனது பராமரிப்பில் இருக்கும் பிள்ளைகளை தவிக்க விட்டுவிடுவோமோ என்ற ஆதங்கமும் பொறுப்பும் கொண்டிருந்த ரீச்சர் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் நல்லூர் மணிமண்டபத்திற்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வேளி நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டு தனது கடமையைச் செவ்வனேசெய்தார். செஞ்சொற் செல்வர் சிவத்திரு. ஆறுதிருமுருகன் அவர்களைத் தமக்குப்பின்; தனது பொறுப்பை ஒப்படைத்தார் என்று நான் கூறுவதில் பெருமையடைகின்றேன். ஏனெனில் இதுகூட ஒரு குருபரம்பரையையொத்த பணியென நான் கருதுகின்றேன். முற்றிலும் மாறுபட்ட - வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் எம் இனத்தின் கண்ணெனத் திகழ்ந்தவர் ரீச்சர் அவர்கள். ஓவ்வோர் செவ்வாய்க்கிழமையும் ஆலய வழிபாட்டில் தமிழ்ப் பண்பாட்டையும், வாழ்வில் எளிமையையும் கடைப்பிடிக்க அவர் கூறும் அறிவுரைகள் - ஏனைய ஆலயங்களுக்கு ஒரு முன்மாதிரி.

எமக்கெல்லாம் உறுதுணையாக வழிகாட்டியாக இருந்த அம்மையாரைப் பிரிந்து இன்று தவிக்கும் துர்க்காபுர மகளிர் இல்லச் சிறுமியருக்கும், (அவர்களது சோகத்தை நாம் ஒருபோதும் தேற்றமுடியாது. வீரகேசரி இணையத்தளத்தில் வெளியான புகைப்படங்களைப் பார்க்கையில் கண்ணீர் மல்கினேன். எமக்கு ரீச்சரின் செய்திகளை விரிவாகத் தந்த வீரகேசரி மற்றும் தினக்குரல், உதயன், தமிழ்நெற், லங்காசிறி, ஈரஅனல் போன்ற இணையத்தளச் செய்தி நிறுவனங்களுக்கு எமது மனம்நிறைந்த நன்றிகள்) தொண்டர் அணியினருக்கும், ஆலய நிர்வாகசபையினருக்கும், தாயாயிருந்து வழிநடத்திய இந்து இளைஞர் சங்கத்தினருக்கும் மற்றும் அம்பிகை அடியார்களுக்கும் எல்லாம்வல்ல ஸ்ரீ துர்க்காதேவியம்பிகை மனதைரியத்தையும், சாந்தியையும் வழங்க மனதாரப் பிரார்த்தித்து ரீச்சரின் ஜீவாத்மா அன்னை துர்க்காதேவியின் பாதாரவிந்தங்களில் நித்தியப் பேரின்பத்தில் ஐக்கியப்பட்டுச் சரணடையப் பிரார்த்தித்து எனது இக்கண்ணீர்க் காணிக்கையைச் சமர்ப்பிக்கின்றேன்.

என்றும் ரீச்சரின் மறவாத நினைவுகளுடன் கலங்கிநிற்கும்
தங்க. முகுந்தன்.

விரிவாக படிக்க ……..

எனக்குப் பிடித்த விவேகானந்தர்!


சிறுவயதிலிருந்தே சுவாமி விவேகானந்தரை மனதளவில் நேசிக்கும் விவேகானந்தப் பிரியன் நான்। அவரது சிந்தனைகள் என் மனதின் ஆழங்களை உணர்வுகளை தொட்டு சிந்தனைகளை துளிர்விடச்செய்தன। என் ஒவ்வொரு மேடைப்பேச்சின்போதும் , ஏன் என்னுடைய மாணவர்களுக்குக் கூட சுவாமியின் கருத்துக்களை தெளிவாக விளக்கியிருக்கிறேன்।


எனக்குக்கிடைத்த நான் சேகரித்த சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை இங்கு தருகிறேன்.

01. நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைக்கு மதம் காரணமல்ல. மதத்தை முறையாக பின்பற்றாமல் போனதுதான் சமுதாய வீழ்ச்சிக்குக் காரணமாகும்.
02. எவனுடைய இதயம் ஏழைகளுக்காக இரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன். மற்றவர்களெல்லாம் துர்ஆத்மாக்களே.
03. எப்போதும் பொறாமையை விலக்குங்கள். இதுவரை நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை செய்துமுடிப்பீர்கள்.
04. கீழ்த்தரமாக காரியங்களால் எதையும் நிறைவாக சாதித்துவிட முடியாது.
05. தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒருசிலரின் வரலாறே உலக சரித்திரமானது.
06. உன்னை நீயே பலவீனன் என நினைத்துக்கொள்வது மிகப்பெரிய பாவம்.
07. உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை து}ற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.
08. செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
09. "நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!"
10. "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!"
11. "நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்."
12. "பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!"
13. "கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."
14. "உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."
15. "அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."
16. "மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."
17. "சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."
18. "நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."
19. "அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."
20. "உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."
21. "உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."
22. இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.
23. பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
24. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
25. இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.
26. அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.
27. ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
28. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
29. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
30. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
31. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
32. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
33. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!
34. இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை இதுவே இப்போது தேவை.
35. சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
36. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
37. இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம்.
38. எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
39. பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.
40. பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.
41. அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும். நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.
42. பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.
43. உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.
44. வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.
45. தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.
46. இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
47. வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்! தளைகளிலிருந்து விடுபடுங்கள்!
48. இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!
49. உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.
50. தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.
51. பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.
52. சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.
53. கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.
54. எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் து}ய்மையையும் ஆன்மா து}ண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் து}ண்டுவது எதுவும் இல்லை.
55. ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.
56. ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.
57. ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!
58. தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.
59. எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
60. எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.
61. தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து து}ள் து}ளாகி விடும்.
62. அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.
63. ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.
64. அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.
65. இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.
66. தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.
67. நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).
68. "உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
69. பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!
70. கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
71. உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
72. அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
73. மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.
74. சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
75. நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.
76. அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.
77. உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
78. உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
79. எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.
80. நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.
81. இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.
82. கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.
83. ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
84. உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.
85. மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.
86. உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.
87. உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.
88. உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.
89. பலவீனமாக இருக்கிறோமே என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.
90. சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

விரிவாக படிக்க ……..

அந்த நாள்...!



அதிகாலை மல்லிகையை
பறித்துவந்து அதில் வழிந்த
சொட்டுப் பனித்துளியை
நுனிவிரலில் ஏந்தி
இனிக்கிறது தேன் என்று சொன்ன
அந்த நாள்…


ரயில் பாதையில்நான்
ஓடி விழுந்தபோது
உன் கைக்குட்டையில்எச்சில் தடவி
ஒத்தடம் கொடுத்த
அந்த நாள்…


கரப்பானுக்கு பயந்து
கூரையில் ஏறி
தவறி விழுந்ததாய்
நீ கண்ட கனவை
நள்ளிரவில் தொலைபேசியில் கூறி
என் கனவைகலைத்த நாள்…..

யாரோ ஒருவன்
வீதியில் இறந்துகிடக்கஅருகில்
அவன் மனைவிஅழுவதைப்பார்த்து
என்னைக்கட்டிப்பிடித்து
எப்போதும் என்னுடன் இருப்பாயா என
ஏக்கத்துடன் கேட்ட நாள்…

மாமாவுடன் பேசியபொழுது
இடையில் என்பெயரைக் கூறி
நீ தடுமாறித் தவித்ததைஅதே பயத்துடன்
மழலை மொழியில்கூறிய
அந்த நாள்…

நகம்கடிக்கும் பழக்கத்தைவிடச்சொல்லி
நீ விரல்கடித்துக்கொண்டு
அழுதுத் துடித்த
அந்த நாள்…

எப்போதோ நாம்ஒன்றாய் பயணித்த
பயணச்சீட்டைபத்திரப்படுத்தி
அடுத்தவருடம் அதே தினத்தில்
முத்தம்கொடுத்தாயே
அந்த நாள்…

இவை அத்தனையும்॥
ஏன் இன்னும் எத்தனையோநினைவுகளை
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்…

யாரோ வைத்த கண்ணிவெடியில் - நீ
கண்ணிமைக்கும் நேரத்தில்
சிதறிப்போனதைத் தவிர…।

-ஆர்.நிர்ஷன

விரிவாக படிக்க ……..