Todays Date:

எனது சினிமா : சங்கிலித்தொடர்

ஒப்பீட்டு ரீதியில் தற்காலத்தில் சினிமாவின் மீது மக்கள் கொண்டுள்ள பிடிப்பு அதிகம் எனலாம். காத்திரமான சினிமா படைப்புகள் காலத்தால் தோற்றுவிடுவதில்லை.பல் அங்கங்களிலும் சினிமா, வாழ்வோடும் சரி மனதோடும் சரி மாற்றங்களை ஏற்படுத்துவதாய் உள்ளது.
எனக்கும் அதேபோல் தான்.சினிமா படைப்பாளிகள், நடிகர்கள் போல் பேசவேண்டும் உடுக்க வேண்டும் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் மனதளவில் பலவற்றை நேசித்து மகிழ்ந்து அழுதிருக்கிறேன்.
சினிமா பற்றிய பலவற்றை எழுதத்தூண்டி இந்தச் சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு என்னை அன்பாய் அழைத்த என் அன்பு நண்பர்கள் நம்ம வந்தியத்தேவனுக்கும் நம்ம மாயாவுக்கும் எனது இதயநன்றிகள்।

01। எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயது என்று சொல்வதற்கு சரியாக நினைவில் இல்லை. முதன் முதலாக பார்த்த படம் என்ன என்பதும் நினைவுக்கெட்டியவரையில் இல்லை. ஆனால் நாயகன் படம் மட்டும் நன்றாக நினைவிருக்கிறது.
எமது ஊரில் திரையரங்கு இல்லை।டீவி டெக் கொண்டுதான் படம் காட்டுவார்கள் (நம்ம சொல்ற படம்காட்றது இல்லப்பா). 1990 களில் ஒரு வீட்டில் டெக் இருக்கிறதென்றால் அவர் பெரிய மனிதர் தான். நாளொன்றுக்கு ஒவ்வொரு வீட்டார்படி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு படம் அந்த டெக் உரிமையாளரின் வீட்டில் ஓடும்.
அங்கு அனுப்புவதற்கு எனது பெற்றோர் விரும்பாததால் இடைக்கிடை வாடகைகொடுத்து அந்த டெக்கினை வாங்கி படம் பார்ப்பதுண்டு. அப்படிப் பார்த்த படம் தான் நாயகன். கமலும் குழந்தைகளும் மழையில் நனைந்து பாடும் பாடல் நெஞ்சைவிட்டகலாதது. கமலஹாசனின் நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்ததால் அவரது படத்தைத் தவிர ஏனைய படங்களை பார்க்க நான் கொஞ்சம்கூட விருப்பமில்லாதவனாக இருந்தேன். மழை பெய்யும் காலங்களில் பேனை மை உடலில் ஊற்றிக்கொண்டு (தென்பாண்டிச் சீமையில பாடல்…) கமலைப் போன்று நடிக்க முற்பட்டுத் தோற்றுப்போனதும் உண்டு. சிவாஜியின் முகபாவனையும் நடிப்பும் இவரும் மனிதப்பிறப்புதானா என வியந்த சிறுவயதுக்காலமும் உண்டு.

எமது வீட்டிலும் டெக் வாங்கிய பின்னர் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன், மைக்கேல் மதன காம ராஜன், தளபதி, தங்க மகன்,குணா, மூன்றாம்பிறை, மௌனராகம், பயணங்கள் முடிவதில்லை, கேளடி கண்மணி,சலங்கை ஒலி, அபூர்வ ராகங்கள் போன்ற படங்கள் பார்த்தது நினைவிருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் படங்கள் பார்க்கத் தொடங்கிய பின்னர் அண்ணாமலை பாடல்மெட்டுகளும், பிரபுவின் சின்னத்தம்பி மெட்டுகளும் காதுமடல்களில் உரசுவதுபோன்ற உணர்வுகளும் உதடுகளின் முனுமுனுப்பும் இப்போதும் நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டிலும் டெக் வாங்கியவுடன் இரவு பகல் என அப்பகுதி மக்கள் வந்துபோவதும் அடிக்கடி படம்பார்ப்பதும் வாடிக்கையானது. ஆனாலும் குறிப்பிட்ட சில படங்களைத் தவிர வேறு படங்கள் பார்த்ததில்லை. பெற்றோரின் கண்டிப்பும் இதற்குக் காரணம்.

०२।கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
கடைசியாக தாம்தூம் பார்த்தேன். இணையங்களில் விமர்சனங்கள் வாசித்திருந்தாலும் பாடல்களுக்காகவும் பாடல்காட்சிகளுக்காகவும் படத்தைப் பார்க்கத் தோன்றியது. திரையும் காட்சியிடலும் எனது துறைசார்ந்தவை என்பதால் காட்சிகளை கமராக்கள் உள்வாங்கிய விதம் அமைப்பு என்பவற்றை நான் அதிகம் கவனிப்பதுண்டு. அந்த வகையில் ஏராளமான காட்சிகளை மனதுக்குள் இருத்திக்கொண்டேன்.

०३.கடைசியாக அரங்கில் அன்றி பார்த்த தமிழ் சினிமா எது,எங்கே,என்ன உணர்ந்தீர்கள்?
இறக்குவானை வீட்டுக்கு சென்றிருந்தபோது கமலின் தசவதாரம் பார்த்தேன். இலங்கையின் "இருக்கிறம்" சஞ்சிகையில் வெளியான தசவதாரமும் பத்துப்பிழைகளும் என்ற விமர்சனக் கட்டுரையில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு விடைகாணுவதற்காக அந்தப்படத்தை பார்த்தேன். பத்துப்பாத்திரங்கள் ஏற்று நடித்துப் பிரமாண்டம் என கமல் காட்டுவதாகவும் அதிகமான பாத்திரங்கள் கதையோடு ஒத்துவராததாகவும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் மேலும் பல காரசாரமான வாதங்கள் கமலுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.
இவை எல்லா விமர்சனங்களையும் விட கமலின் நடிப்பும் இளமைத் தோற்றமும் வியப்பில் ஆழ்த்தியதுடன் உலக நாயகன் மதங்களை சரியாகக் கையாண்டு ஈற்றுத்தீர்வு தரும் விதமும் அருமையாக இருந்தது.

०४.மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
காதலுக்கு மரியாதை. காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். சில வேளைகளில் அப்போதைய விடலைப்பருவமும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

०५।உங்களை மிகவும் தாக்கிய தமிழ்சினிமா – அரசியல் சம்பவம்?
அரசியலோடு தொடர்பில்லையெனினும் அரசியலும் ஒரு காரணம் என சொல்லக்கூடிய ஈழத்திலிருந்து இராமேஸ்வரத்துக்கு சென்று தஞ்சமடைந்திருக்கும் அகதிகள் பற்றிக் கதைகூறிய இராமேஸ்வரம்.
பாடல்வரிகளில் எம்மவர்களின் கண்ணீரை வரிகளாக்கியதுபோன்ற உணர்வு. தாய்நிலத்தை பிரிந்து உறவு,நெருக்கங்களை துறந்து எதிர்காலத்தை ஏக்கத்துடன் பார்க்கும் நம்சமூகத்துடன் தொடர்புடையதான பாடலும் படமும்.

"எல்லோரையும் ஏத்திப் போக கப்பல் வருமா॥?
கைகள் தட்டும் பட்டாம்பூச்சி கையில் வருமா..?
அட தூரம் கண்ணில் வருமா ஈரம் கண்ணில் வருமா?
யாரும் இல்லா ஊருக்குள்ள தெய்வம் தேரில் வருமா?

எங்கள் பூமி தீயின் வசமே
எம்மைச் சுற்றி அலைகள் எழுமே
உண்மைத் தோளில் மாலை விழுமே
நம்பிக்கை நாளை உரமாகும்!

நல்லூர்க் கோயிலில் நாதஸ்வரம்
ஊதிடும் நாள் வருமா?
கும்பிடு சந்தையில் புகையிலை
வாங்கிட நாள் வருமா?
கல கலனென்னு பாடசாலைக்குள்ள
படிக்கிற நாள் வருமா? "

இந்தப்பாடலை கேட்கும்போது மனதில் ஏதோ பாரமாயும் உணர்வின் ஈர உணர்வுகளை தொட்டுச்செல்வதாயும் இருக்கும். குறிப்பாக பாடலின் ஆரம்பத்தில் அமைந்த சிறுமியின் குரல்.

०६.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
ஆமாம். வாரஇறுதி நாட்களில் சினிமா இணையப்பக்கங்களில் நுனிப்புல்மேய்வதுண்டு. புதிய படங்களில் இயக்குநர்,இசையமைப்பாளர் விபரங்களைத் தேடும் ஆவல் அப்போதைப்போன்று இப்போதும் உண்டு. புதிய படங்கள் பற்றி ஒவ்வொருவரின் பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் எனது பார்வையில் எவ்வாறு தெரிகிறது என்றும் வாசித்துக் கணக்கிட்டுக்கொள்வேன்.

०६.தமிழ் சினிமா இசை?
இசைப்புயலின் ரசிகன் நான். அலுவலகத்தில்கூட இவரது பாடல்களை தான் அதிகம் நேசிப்பேன். தனிமையில் இருக்கும்பொழுதுகளில் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் இசையை மட்டும் (பின்னணிக் குரல் தவிர்த்து) கேட்பது வழக்கம். குறிப்பாக மார்கழிப்பூவே, என் காதலே என் காதலே என்னை என்ன செய்யப் போகிறாய், ஓ பட்டர் ஃப்ளை ( இன்னும் உண்டு) அதிகம் பிடிக்கும்.
வேறு இசை அல்பங்களை தழுவி நமது இசையமைப்பாளர்கள் இசையமைத்த பாடல் என அடிக்கடி செய்திகள் வரும்போது அவற்றையும் விட்டுவைக்காமல் படித்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வேன்.

०७.தமிழ் தவிர வேறு இந்திய,உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? ஆதிகம் தாக்கிய படங்கள்?
ஹிந்தி,ஆங்கிலத் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. வீட்டில் நேரம்கிடைக்கும்போது. ஓம்காரா படம் அரசியலின் அந்தரங்கங்களை வெளிக்கொணருவதாக இருந்தது.இந்தப்படத்தைப் பார்த்து மிக அதிகமாக யோசித்தது நினைவிருக்கிறது.
பேய்க்கதைகள்,பழங்கால யுத்தம் தொடர்புடைய ஆங்கிலப்படங்களை விடிய விடிய பார்ப்பதும் உண்டு. டிரகன் ஹார்ட், த ஷெடோ போன்றவற்றை விரும்பி ரசித்தேன் (இன்னும் உண்டு).

०८.தமிழ் சினிமா உலகுடன் நேரடித் தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
மேடை நாடகங்களைப் போன்றளவு தமிழ் சினிமாவுடன் எனக்கு நேரடித் தொடர்பு எதுவும் இல்லை( அதனால் மற்றைய கேள்விகளுக்கு பதிலும் என்னிடத்தில் இல்லை)

१०।தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எமது தாய்மொழியை தனித்துவமாக பேணும் சினிமா தொடர்ந்தும் நிலைக்குமானால் சிறந்தது. சந்ததியினருக்கு தவறான வழிகாட்டுதல்களை அளிக்கும் எந்தவொரு சினிமாவும் தன்துறைக்கோ சமுதாயத்துக்கோ பங்குவகித்து நிலைக்கப்போவதில்லை. பின்னிலையான கலாசாரத்தலுவல்கள் தவிர்க்கப்பட்டு வளரும் சினிமா உயர்தரத்தைப் பெறும். இன்றுமட்டுமல்ல எதிர்காலத்திலும்.
சினிமா குறிப்பிடத்தக்களவு வாழ்க்கையின் சிறுபுள்ளியளவாயினும் இணைந்துள்ளது எனலாம்। சினிமா பற்றிய எதுவுமே இல்லையென்றால் என்னைப்பொருத்தவரையில் பெரிதான மாற்றம் இல்லாவிடினும் கவலை உண்டு. எனினும் காலமாற்றம் மாற்றிவிடக்கூடும்.


இந்த சங்கிலித்தொடர் கேள்விபதிலுக்கு நான் அழைக்கும் என் அன்பு நண்பர்கள்:
ஊரோடி பகீ
லோஷன்
சிவலிங்கம் சிவகுமாரன்
ஹொங்கொங் ஈழவன் எச்.கே.அருண்
ஹேமா
மாரி மகேந்திரன்

19 comments:

பகீ said...

என்னை சினிமா பற்றி எழுத சொல்லி இருக்கிறீங்க.. முடிஞ்சளவுக்கு முயற்சி செய்யிறன்...

இறக்குவானை நிர்ஷன் said...

//பகீ said...
என்னை சினிமா பற்றி எழுத சொல்லி இருக்கிறீங்க.. முடிஞ்சளவுக்கு முயற்சி செய்யிறன்...
//

முடிஞ்சளவு இல்ல. முழுமையாக தாருங்கள்.
எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்.

ஹேமா said...

நிர்ஷன் என்னையும் சினிமாக் கூத்தில் மாட்டிவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.முயற்சி செய்கிறேன்.விடுமுறை வேலைகளும் மன அலுப்புக்களும் நிறையவே.
யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
நிர்ஷன் என்னையும் சினிமாக் கூத்தில் மாட்டிவிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.முயற்சி செய்கிறேன்.விடுமுறை வேலைகளும் மன அலுப்புக்களும் நிறையவே.
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
//

நன்றி ஹேமா.
உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.

mirunalan said...

பிஸியான அலுவலா வெளியில போறதா சொல்லிட்டு சமந்தாவுக்கு போனத பத்தி எழுதல்லயே நிர்ஷன்

mirunalan said...

பிஸியான அலுவலா வெளியில போறதா சொல்லிட்டு சமந்தாவுக்கு போனத பத்தி எழுதல்லயே நிர்ஷன்

ARV Loshan said...

நன்றி நிர்ஷன்.. ஆனால் நான் ஏற்கெனவே பதிவு இட்டுவிட்டேன் நண்பரே.. பார்க்கவில்லையா?(வந்தியத்தேவனுக்கு நன்றிகள்)
Oh butterfly பாடல் மீரா திரைப் படத்தில் இளையராஜா இசையமைத்தது..
நீங்களும் காதலுக்கு மரியாதை கொடுத்தவர் தானா? ;)

சமந்தா பக்கம் தனியாகவா? அல்லது....... ?

மாயா said...

ஆறுதலான அருமையான பதிவு !!!!

இறக்குவானை நிர்ஷன் said...

// mirunalan said...
பிஸியான அலுவலா வெளியில போறதா சொல்லிட்டு சமந்தாவுக்கு போனத பத்தி எழுதல்லயே நிர்ஷன்
//

ஐயோ,
யாரிந்த மிருணாளன்??? அப்படி சமந்தாவுக்கு போனதா ஞாபகமேயில்லையே???

(இப்படி எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க??)

இறக்குவானை நிர்ஷன் said...

// LOSHAN said...
நன்றி நிர்ஷன்.. ஆனால் நான் ஏற்கெனவே பதிவு இட்டுவிட்டேன் நண்பரே.. பார்க்கவில்லையா?(வந்தியத்தேவனுக்கு நன்றிகள்)
Oh butterfly பாடல் மீரா திரைப் படத்தில் இளையராஜா இசையமைத்தது..
நீங்களும் காதலுக்கு மரியாதை கொடுத்தவர் தானா? ;)

சமந்தா பக்கம் தனியாகவா? அல்லது....... ?
//

சமந்தா விவகாரத்தை பூதாகரமாக்காமல் விடமாட்டீங்க போல??
ச்ச்சும்மா அப்படி இப்படியெல்லாம் கேட்கக்கூடாது ஆமா...

இறக்குவானை நிர்ஷன் said...

//மாயா said...
ஆறுதலான அருமையான பதிவு !!!!
//

அன்பு நன்றிகள் மாயா.

Anonymous said...

//
மழை பெய்யும் காலங்களில் பேனை மை உடலில் ஊற்றிக்கொண்டு (தென்பாண்டிச் சீமையில பாடல்…) கமலைப் போன்று நடிக்க முற்பட்டுத் தோற்றுப்போனதும் உண்டு.
//

இது வேறா?கிகிகிகிகி

இறக்குவானை நிர்ஷன் said...

//Thooya said...
//
மழை பெய்யும் காலங்களில் பேனை மை உடலில் ஊற்றிக்கொண்டு (தென்பாண்டிச் சீமையில பாடல்…) கமலைப் போன்று நடிக்க முற்பட்டுத் தோற்றுப்போனதும் உண்டு.
//

இது வேறா?கிகிகிகிகி
//

அது ஒரு காலம்.
எல்லாருக்கும் கிண்டலாப் போச்சு..!

Anonymous said...

Hi Kalu Banda,
Alahana pathivu. nee eluthiyirukkum vithamum piramatham.

unakku pidiththa paadalhalil- "entha pennilum illatha & Vennilave vennilave vinai thaandi" ivatrai podavillaiye. Ivai thaney nee nandraga KUDITHA pin paaduwathu.Paaduwathu mattuma...??

Ennaiyum yar endru ketuvidathey.

Naan thaan NiThU.

இறக்குவானை நிர்ஷன் said...

வா நிது,
நீ சொல்வதைப் போன்றெல்லாம் நானில்லை.
அந்தப்பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எந்தப் பெண்ணிலும் இல்லாதவொன்று பாடல் கேட்கும்போதெல்லாம் என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தும்.

உன்னை யார் என்று கேட்க நிச்சயமாய் என்னால் முடியாது. அது உனக்கும் தெரியும்.

Unknown said...

Aiya Nirshan,

Vidalaiparuvaththil Nam partha Thamil padangalai Kuriyruntheergal,
Anal Angilame theriya antha kalaththil Nam partha 'ANGILA PADANGALAI' Kuravillaye.

Balu.

இறக்குவானை நிர்ஷன் said...

வாங்க பாலு.
இப்படி வம்புல மாட்டிவிடுறதுக்கென்றே எத்தன பேர் கிளம்பியிருக்கீங்க?

ஹேமா said...

நன்றி நிர்ஷன்.நீங்கள் மாட்டிவிட்ட சினிமாத் தொடர் என் புதிய வலைப்பூவில் தொடங்கியிருக்கிறேன்.
பாருங்களேன்.வலைப்பூ இன்னும் பூரணமாகவில்லை.கவிதையை விட வேறு ஏதாவது பதிவுகளை இடலாம் என்று யோசிக்கிறேன்.மற்றும் சில விஷயங்களை அலசலாம்....
வாதாடலாம் என்றும் நினைக்கின்றேன்.அது அரசியலோ அல்லது சமூகமோ அல்லது சாதாரண விஷயங்களாகவோ இருக்கலாம்.
மனதிற்குள் கேள்விகளோடு இருக்கும் எந்த விஷயங்கள் ஆனாலும் யார் தலையங்கம் தந்தாலும் பதிவில் இட்டு அலசலாமா?அபிப்பிராயம் கேட்டுக் காத்திருக்கிறேன்.

http://www.santhyil.blogspot.com/

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி ஹேமா.
எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது உங்களது புதிய வலைத்தளம்.
பின்னூட்டம் தந்திருக்கிறேன்.

நன்றிகள்.