Todays Date:

அதிகம் கோபம் கொள்பவரா நீங்கள்? இதைப் படியுங்கள்


அளவுக்கு அதிகமான கோபத்தால் சில சந்தர்ப்பங்களில் முக்கியமான பலவற்றை இழந்திருப்போம்.அல்லது கோபத்தை தவிர்க்க முடியாமல் எம்மை நாமே துன்புறுத்திக்கொண்டிருப்போம்.
இவற்றைத் தவிர்க்க சில வழிகள்:

01. கோபம் வந்தால் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுங்கள்- சூழ்நிலையைத் தவிர்க்கும்போது கோபம் தணியும்

02. ஒரு கப் தண்ணீர் அருந்துங்கள் - குளிர்மையான தண்ணீர் மாற்றத்தை ஏற்படுத்தும்

03. கண்ணாடியைப் பாருங்கள். உங்கள் முகத்தோற்றத்தைக் கண்டு ஆறுதல் அடைவீர்கள்

04. ஆறுதலாக கண்மூடி மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் - ஆழமான சுவாசம் ஆசுவாசப்படுத்தும்

05. மென்மையான இசை கேளுங்கள் - இசை கோபத்தைக் குறைத்து சாந்தப்படுத்தும்

06. கண்ணை மூடி உங்களுக்குப் பிடித்த பெரியோரின் முதுமொழி ஒன்றை மனதுக்குள் சொல்லுங்கள் - மனம் மாற வழிவகுக்கும்

07. இயற்கை அழகுடனான இடம் அருகில் இருந்தால் அங்கு உங்கள் தனிமையை போக்குங்கள் - இயற்கை சாந்தத்துக்கு நல்ல மருந்து

08. கோபத்துக்கான அடிப்படைக் காரணத்தையும் அதற்கான தீர்வினையும் மனச்சாட்சியுடன் கதையுங்கள் - நியாயம், கோபத்தை அடக்க நல்ல தீர்வு தரும்


இன்னும் இருந்தால் நீங்கள் சொல்லுங்கள்....

18 comments:

மோகன் காந்தி said...

9-கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

10-அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

11-செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

12-கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்


13-எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

14-சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

15-கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

16-முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்

Anonymous said...

சாந்தமான நிறங்களை பாருங்கள்.

கண்மூடி அ ஆ.... சொல்லுங்கள்

சந்தோஷமான பழைய சம்பவங்களை மீடடுப்பாருங்கள்....

இவ்வளவுதான் தெரியுமுங்கோ.

-வசந்தன்
கிராண்ட்பாஸ்

M.Rishan Shareef said...

நிர்ஷா,
எனக்கு இப்படியெல்லாம் பயங்கரமாக் கோபம் வந்ததில்ல..ஆகவே எப்படிச் சொல்றது நண்பா ? :)

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி மோகன் காந்தி.

வசந்தனுக்கும் நன்றிகள்

சிவலிங்கம் சிவகுமாரன் said...

இத படிச்சுட்டு இன்னம் கோபம் கூடுதுங்கோ நிர்சன்.கோபத்துக்கு மருந்தா? எனக்கு… எனக்கு வருகிற கோபத்துக்கு அப்படியே உங்களை…அநியாயம் நடக்கும் போது பொங்கியெழுந்து தாங்க அண்ணனுக்கு பழக்கம் தண்ணியெல்லாம் குடிச்சுட்டு சும்மா இருக்க முடியாது. சரி முயற்சி செய்கிறேன்
சிவலிங்கம் சிவகுமாரன்

இறக்குவானை நிர்ஷன் said...

//siva said...
இத படிச்சுட்டு இன்னம் கோபம் கூடுதுங்கோ நிர்சன்.கோபத்துக்கு மருந்தா? எனக்கு… எனக்கு வருகிற கோபத்துக்கு அப்படியே உங்களை…அநியாயம் நடக்கும் போது பொங்கியெழுந்து தாங்க அண்ணனுக்கு பழக்கம் தண்ணியெல்லாம் குடிச்சுட்டு சும்மா இருக்க முடியாது. சரி முயற்சி செய்கிறேன்
சிவலிங்கம் சிவகுமாரன்
//

ஆஹா..............
சரி சரி இனியாவது முயற்சி செய்யுங்கள். உங்களுக்கு இல்லாவிடினும் உங்களைச் சார்ந்தோருக்கு உதவுமல்லவா?

வருகைக்கு நன்றி சகோதரரே.

Anonymous said...

Nn,
Inge nee kuripitta kobam "niyayamatra kobam" ena ninaikiren. niyayathukkaga kobapadalam thaney?

unnudaiya muthalam kurippaiyum, Mohan Kandhiyin 10 vathu kurippaiyum kobam varum pothu kadaipidikalam. Anal 2-8 konjam kadaipidippathu kastam. Enenil Naan kobakkari. Anubawapattal than theriyum ithellam kobam varum pothu kadaipidikkamudiyuma enbathu.

Nn, Ellavatraiyum / Ellaraiyum NESIKKA arambithal kobamey varathillaiya?.

CU & TC
Fm: Nithu

mirunalan said...

அநியாயங்களைக் கண்டு கோபம் வந்தால் தண்ணீ(ர்) குடித்து தணிக்காதீர்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...
நிர்ஷா,
எனக்கு இப்படியெல்லாம் பயங்கரமாக் கோபம் வந்ததில்ல..ஆகவே எப்படிச் சொல்றது நண்பா ? :)
//

அதுதான் நல்லது ரிஷான்.
நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

// Anonymous said...
Nn,
Inge nee kuripitta kobam "niyayamatra kobam" ena ninaikiren. niyayathukkaga kobapadalam thaney?

unnudaiya muthalam kurippaiyum, Mohan Kandhiyin 10 vathu kurippaiyum kobam varum pothu kadaipidikalam. Anal 2-8 konjam kadaipidippathu kastam. Enenil Naan kobakkari. Anubawapattal than theriyum ithellam kobam varum pothu kadaipidikkamudiyuma enbathu.

Nn, Ellavatraiyum / Ellaraiyum NESIKKA arambithal kobamey varathillaiya?.

CU & TC
Fm: Nithu
//

வா நிது.
நீ கடைசியாய் குறிப்பிட்டுள்ளது உண்மை. அப்படித்தான் இருக்க வேண்டும்.

அதிகமான முன்கோபங்கள் நல்ல பயனைத் தந்ததில்லை தானே? அதுதான் எழுதியிருந்தேன்.

நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

//mirunalan said...
அநியாயங்களைக் கண்டு கோபம் வந்தால் தண்ணீ(ர்) குடித்து தணிக்காதீர்கள்.
//

வாருங்கள் மிருனாளன். உங்கள் முதல் வருகை இதுதான். உங்களுடைய புரொஃபைல் ஐயும் நான்தான் முதலில் பார்த்தேன் என நினைக்கிறேன்.

ஏற்புடைய கருத்து. அப்போது எதனாலும் தணிக்கமுடியாத கோபம்தானே வரும்.

நன்றி.

Anonymous said...

இஸ்லாமியப் பேரரசின் நான்காம் கலீஃபாவாக ஆட்சி செய்தவர் ஹஸரத் அலி (ரலி). அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி, சினத்தைக் கட்டுப்படுத்துவதன் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.

அலி அவர்கள் ஓர் அறப்போரில் எதிரியை வீழ்த்தி அவனது மார் மீது அமர்ந்து அவனைக் கொல்ல யத்தனித்து வாளை ஓங்கிய பொழுது அவன் தன் வெறுப்பையும், ஆத்திரத்தையும் வெளிக்காட்டும் வகையில் மன்னர் அலியின் முகத்தில் எச்சிலைக் காரி உமிழ்ந்துவிட்டான். ஆனால் என்ன ஆச்சரியம்! அலி அவன் மீது எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு கைவாளைத் தன் உறையில் இட்டவராக, அவன் மார்பிலிருந்து இறங்கி நின்றார். அப்பகைவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ""ஓங்கிய வாளை ஏன் உறையினுள் இட்டீர்கள்? என்னைக் கொன்றிருக்கலாமே'' என வியப்பில் ஆழ்ந்தான்.

அதற்கு அலி அவர்கள் அமைதியாக, ""நான் இறைவன் பாதையில் அறப்போர் புரிந்து உன்னை வென்றேன். இறுதிக் கட்டத்தில் என் முகத்தில் காரி உமிழ்ந்ததற்காக உன்னைக் கண்டதுண்டமாக வெட்டியிருந்தால் நான் இறைவனுக்காக அல்லாது, என் கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டியே உன்னைக் கொன்றேன் என்றாகிவிடும். அப்பொழுது இறைவனுடைய கோபத்திற்கு நான் ஆளாகிவிடுவேன். மேலும், "கோபத்தைக் கட்டுப்படுத்துவது பகைவனை அடக்குவதை விடவும் சிறந்த வீரச் செயல்' என்று எங்கள் நபிகள் நாயகமும் கூறியிருக்கிறார். ஆகவே நான் உன்னைக் கொலை செய்யவில்லை'' என்றுரைத்தார்.

இவற்றைக் கேட்டுவிட்டு அந்த எதிரி, கோபத்தை அடக்குவதன் சிறப்பினை உணர்ந்தவனாக அலி அவர்களைக் கட்டித் தழுவி, இறைமறையையும், நபிவழியையும் ஏற்றுக் கொண்டான் என்று இஸ்லாமிய வரலாறு எடுத்துரைக்கிறது.

""கோபம் சைத்தானுடைய குணம். சைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன்; நெருப்பின் இயல்பு கொதித்தெழுதலும், சுட்டெரித்தலுமாகும். மனிதன் மண்ணினால் படைக்கப்பட்டவன்; மண்ணின் தன்மை அடக்கமும், அமைதியுமாகும்.

ஒரு மனிதன் கோபம் கொள்கிறான் என்றால் சைத்தான் அந்த மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறான் என்று பொருள். சைத்தான் வெறுப்புக்குள்ளானவன். கோபமும் அவ்வாறே வெறுக்கப்பட வேண்டிய ஒன்று. ஆதலால் ஒரு மனிதனுக்குக் கோபம் வரும்போது உடனே அவன், சைத்தானுடைய தீங்கிலிருந்து தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டும். அதனால் கோபம் தணிந்து அம்மனிதன் சாந்தம் அடைகிறான்'' என்று கூறியுள்ளார் நபிகள் நாயகம்.

மேலும், ""நெருப்பைத் தண்ணீர் அணைத்து விடுவதுபோல, ஒரு மனிதனுக்குக் கோபம் வரும்போது அவன் தண்ணீரைக் கொண்டு முகம், கை, கால்களை "உளு' எனும் அங்க சுத்தி செய்து கொண்டால் அக்கோபம் தணிந்துவிடும்'' என்றார் நபியவர்கள். (ஆதாரம்: "அபூ தாவூத்')

ஒரு மனிதர், நபிகள் நாயகத்திடம் வந்து தனக்குப் பயனளிக்கும் வகையில் சுருக்கமாக ஏதாவதொரு அறிவுரை கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நபி, "கோபம் கோள்ளாதீர்!' என்று கூறினார். மீண்டும் அந்த மனிதர், வேறு அறிவுரை கூறும்படி கேட்டபொழுது, "கோபம் கொள்ளாதீர்' "கோபம் கொள்ளாதீர்' என்ற பதிலையே திரும்பவும் அறிவுரையாகக் கூறினார். இது "புகாரி' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"விஷத்துளி விழுந்ததும் தேனும் விஷமாகிவிடுவது போன்று கோபம் எனும் தீயக்குணம் ஒருவனுடைய எல்லா நற்பண்புகளையும் பாழாக்கிவிடுகிறது' என்பதும், "யார் கோபத்தை அடக்கிக் கொள்கிறாரோ அவர் மீது இறைவன் கோபம் கொள்வதில்லை; மேலும் இம்மையில் கோபத்தை வென்றவர், மறுமையில் வேதனையை வென்றவராவர்!' என்பதும் நபிமொழியே. நபிகள் நாயகம் காட்டும் வழியில் நிற்போம்... கோபத்தைத் தவிர்த்து வாழ்வில் நலம் பல பெறுவோம்!

ஹேமா said...

நிர்ஷன்,எனக்கும் கோவம் வந்தா
....என்ன பிரச்சனையோ சம்பந்தப் பட்டவரிடம் கலந்து கதைத்து (சிலசமயம் என்னில் கூட சரி பிழை இருக்கலாம்)மனதில் தெளிவு வர முயற்சி செய்வேன்.அதுவரை அந்தக் கோவம் நிலைத்து நிற்கும்.

ஹேமா said...
This comment has been removed by the author.
Anonymous said...

தண்ணி வழியை முயற்சித்து பார்க்கின்றேன்...நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

//Anonymous said...
இஸ்லாமியப் பேரரசின் நான்காம் கலீஃபாவாக ஆட்சி செய்தவர் ஹஸரத் அலி (ரலி). அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி, சினத்தைக் கட்டுப்படுத்துவதன் சிறப்பினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
//

நன்றி அனானி.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
நிர்ஷன்,எனக்கும் கோவம் வந்தா
....என்ன பிரச்சனையோ சம்பந்தப் பட்டவரிடம் கலந்து கதைத்து (சிலசமயம் என்னில் கூட சரி பிழை இருக்கலாம்)மனதில் தெளிவு வர முயற்சி செய்வேன்.அதுவரை அந்தக் கோவம் நிலைத்து நிற்கும்.
//
அதுவரை நிலைத்திருக்கும் கோபத்தால் யாருக்கும் எந்தத் தொல்லையும் இல்லையாயின் நல்லது.

நன்றி.

இறக்குவானை நிர்ஷன் said...

//Thooya said...
தண்ணி வழியை முயற்சித்து பார்க்கின்றேன்...நன்றி
//
ம்ம் சரி சரி.
அது வர்க்அவுட் ஆனதும் கட்டாயம் எனக்கு மின்மடலிடுங்கள்.

வருகைக்கு நன்றி தூய்ஸ்