உனக்கான இருப்பு !
உனக்கான
உனக்கேயான
இருப்பும் இடமும்
ஒளியூட்டப்படாமல் இருக்கிறது !
உன்
பிரிவினூடான
ஒவ்வொரு பயணங்களிலும்
அழத்துடித்து
அடங்கிப்போகும்
என்
மனதையும் மையங்களையும் …
உன்
களிப்புகளுக்கிடையில்
உறைந்து ஊனமாகும்
என்
எதிர்பார்ப்புகளையும்
ஏக்கங்களையும் …
உன்
மென்மொழிகளில்
மௌனம் காக்கும்
என்
ஊமை நினைவுகளின்
அடையாளங்களையும்
ஆத்மார்த்தங்களையும் …
தவிர்க்கவே எண்ணி
தருணம் பார்த்து
தவறாமல் காத்து நின்ற
பொழுதுகளையும்
இருத்தலையும் …
இமைக்கூடங்களில்
சிறையிருக்கும்
கடைசிப் பார்வையையும்
உணர்பாசத்தையும் …
வார்த்தை கோர்த்து
எழுதித் திரித்து
உனக்கான என் இருப்பில்
வைத்திருக்கிறேன் !
தனியறையில்
தவம்கிடக்கின்றன
என் கவிதைகள்
காலத்தோடான அத்தனை நினைவுகளையும்
ஏந்திச் சுமந்தபடி !
ஒன்றும் வேண்டாம்
உன்
கண்களின் வெளிச்சம் கொடு !
அந்த இருட்டறையில்
நீள் வெளியாய் நிறைந்திருக்கும்
வெண்காகிதங்களில்
உன்
பெயர்மட்டும் ஜொலிக்கப்பார்க்க
ஆசை எனக்கு !
-ஆர்.நிர்ஷன்
இறக்குவானை
8 comments:
அழகான கவிதை நிர்ஷன் !
நன்றி ரிஷான்.
through this kawithai i can feel how you love her and miss her.Dont worry verything will be alright.oneday all ur dreams will come true.as a close friend i can feel ur pains.
luv
Nirykutty
tnx niru.
Nn
intha kawithai inge jolikum ena naan ethirparkavillai. Santhosamai irukirathu. Un "Paarveliye Antha Paavai" kawithaiyaiyum ithu minchivittathu. alagaha eluthiyirukirai....
Oru chinna kawalai... un intha kawithai kaadhal thalaipitkul adangivitathu enbathu than.
innum niraiya eluthu. Rasipathatku palar irukirarhal. Yen nee eluthiya matraiya kawithaigalaiyum intha medaiku konduvaralame Nn.
CU & TC
Fm: Nithu
நிது,
உனது வருகையை எப்போதோ எதிர்பார்த்தேன். வருகை தந்ததில் மகிழ்ச்சி. அடிக்கடி வந்து ஊக்கமூட்டுகிறாய்.
காட்சி,உணர்ச்சி,பொருள்,படர்க்கை என்பவற்றில்(இன்னும் உண்டு)வழமையான நமது பாசத்திலும் பார்க்க அதிகமான நேயத்தை காதல் எனக் கொள்ளலாம் தானே?
அதனால் தான் இயற்கையின் மீதான காதல்,புத்தகக் காதல் என்றெல்லாம் சொல்கிறோம்.
எனக்கும் அப்படித்தான்.அதிகமான பிடிப்பு என்று கூட சொல்லலாம். புரிகிறது என நினைக்கிறேன்.
அடுத்த கவிதையில் சந்திக்கிறேன்.
Aiya Nirshan
UNGALIN KATHAL KAVITHAIGALAI NAN PALLINAL MUTHAL RASIKKINREN.
UNGALIN KATHAL ANUBAVAM (ANUBAVANGAL) PATRI...........
BALU.
kavithai jeeva uurin watradha nathy
kavithai yasippin pinpulam yadhooo.....?
Post a Comment