Todays Date:

சித்தனின் ‘கிழித்துப்போடு’

“சிந்தை தெளிவாக்கு – அல்லால்
இதைச் செத்த உடலாக்கு
பந்தத்தைப் போக்கிவிடு – அல்லால்
உயிர் பாரத்தை நீக்கிவிடு”

என தேவியிடம் விண்ணப்பித்தான் கவித்தலைவன் பாரதி.

“என்னுடைய சிந்தனைகள் அனைத்தையும் தூய்மைக்கிவிடு. நிலையில்லாத இந்த உலகம், உறவுகள் மீதான என் பந்தத்தைப் போக்கிவிடு. இவையிரண்டும் இல்லையேல் என் உயிரை நீ எடுத்துக்கொள்” என்கிறான்.

உயிர் வேறு, உடல் வேறு என்பதை அறிவதற்கும், நிலையற்ற வாழ்வில் நிலையியல் எது என்பதை வேறுபடுத்திக்கொள்வதற்கும் காலம் தேவைப்படுகிறது.

சிலர் பக்குவத்தினூடாகவும் சிலர் பண்படுத்தலினூடாகவும் சிலர் அனுபவித்தினூடாகவும் சிலர் கல்வியினூடாகவும் இதனை அறிந்துகொள்கிறார்கள்.

அவ்வாறு உலகத்தைப் பற்றியும் நிலை,நிலையாமை பற்றியும் விளக்கிக் கூறுவதுதான் “சித்தன் பதில்கள்”.

வீரகேசரி வார வெளியீட்டில் பிரதி ஞாயிறுதோறும் வெளிவரும் சித்தன் கேள்வி பதில்கள் வாசகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்துக்கொண்ட பகுதியாகும்.

அந்தப் பகுதியில் முக்கியமான விடயங்கள் தொகுக்கப்பட்டு ‘கிழித்துப்போடு’ எனும் தலைப்பேற்று நூலாக வெளியிடப்படவுள்ளது.

நூலின் அறிமுக விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (21.11.2010) மாலை 4 மணிக்கு கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.






அரசியல் சாயம் கலக்காமல் தனித்துவமாக நடைபெறவுள்ள இந்த அறிமுகவிழாவுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

விரிவாக படிக்க ……..