Todays Date:

மஹிந்தவின் கட்அவுட் - யாவும் கற்பனை!


அம்மா: மகனே எவ்விடத்தில போய்க்கொண்டிருக்கிறாய்?
மகன்: மஹிந்த மாமாவுடைய 10 ஆவது கட்அவுட்டை தாண்டியிருக்கேன்மா.
---------------------------------------------------------------------------------------------
நடத்துநர்: மஹிந்தவோட 20 ஆவது கட்அவுட்டில் இறங்குறவங்க இருந்தால் முன்னால வாங்கோ. 15 ஆவது கட்அவுட்டில் ஏறினவங்க டிக்கெட் எடுங்கோ
---------------------------------------------------------------------------------------------
தொலைபேசி விளம்பரம்
தேசத்தில் எங்கிருந்தாலும் விரும்பியவருடன் தொடர்புகொள்ளுங்கள். நாம் எப்போதும் உங்கள் அருகிலேயே இருக்கிறோம் -
மஹிந்தவின் கட்அவுட் போல
----------------------------------------------------------------------------------------------
பொதுமகன்: இலெக்ட்ரிசிட்டி போர்ட் ஆ?
அதிகாரி: ஆமாம். சொல்லுங்கோ.
பொதுமகன்: ஐயா.. இங்கே மின்கம்பத்தில மரம் விழுந்திட்டு. உடனடியா வந்து எடுத்துவிடுங்கோ. இல்லையென்டா பெரும் ஆபத்துதான்.
அதிகாரி: எந்த இடத்தில என்று சரியாச் சொல்லுங்கோ. ஆட்கள அனுப்புறோம்.
பொதுமகன்: மாளிகாவத்தை கோயில் வீதியில மஹிந்தவின் 12 ஆவது கட்அவுட் இருக்கிற மின்கம்பம்
அதிகாரி: ?
-------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியை: சீகிரியா ஓவியங்கள் எனும் தலைப்பில் சில வரிகள் எழுதுங்கள்
மாணவன்: 01. சீகிரியா ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை
02. சீகிரியா குகைக்கு முன்பாக ஜனாதிபதி மஹிந்தவின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
03. மஹிந்த ராஜபக்ஷ எமது நாட்டின் ஜனாதிபதியாவார்.
04. சீகிரியாவுக்கு செல்லும் வழியெங்கும் அவருடைய ஓவியங்கள் உள்ளன.
ஆசிரியை: ?
-----------------------------------------------------------------------------------------------------------
காதலனின் கவிதை:
பரந்த வயல்வெளியில் காற்று, வெயில், மழை பாராமல் உனக்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறேன்.
மஹிந்தவின் கட்அவுட் போல!
------------------------------------------------------------------------------------------------------------------
ரஜினி ஸ்டைல்:
கண்ணா...நான் ஒரு தடவ சொன்னா நூறு கட்அவுட் அடிப்பாங்க. முடிவெடுத்து இறங்கிட்டா நான் கட்அவுட் அடிக்கிறத யாராலும் தடுக்க முடியாது. கண்ணா... இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலு. நான் இன்னைக்கு சொல்றேன் நாளைக்குப் பாரு. ஊரெல்லாம் நம்ம கட்அவுட் சும்மா.. அதிருமில்ல!

(யாவும் கற்பனை)
கேலிச் சித்திரம்: ஆர்.சி. பிரதீப்

விரிவாக படிக்க ……..