Todays Date:

மீண்டும் உயிர்த்தெழுகிறேன் !

மனதில் ஓர் இனம்புரியாத மகிழ்ச்சி. உயிரில் கலந்திருக்கும் தமிழார்வம் மேலும் பிரவாகப்பட்டு நெஞ்சுநிமிரச்செய்தது போன்ற புத்துணர்ச்சி. இதுவரைக்கால கபளீகரத்துக்கு விடைகொடுத்து ஆரிடை நடைதேடும் இலட்சிய வேகம் என்பவற்றுடன் புதிய பக்கத்தில் மீண்டும் உயிர்த்தெழுகிறேன்.
இந்த வலைத்தளத்தை ஆரம்பித்தது முதல் பல பிரச்சினைகள் உருவெடுத்தபோதும் என் சுயஆக்கங்களை எழுதிவந்தேன். தற்போது கட்டாரில் வசிக்கும் இறக்குவானை மண்ணின் சிறந்த தமிழார்வலர்களில் ஒருவரான நண்பர் விக்கி எனது வலைத்தளத்தை மேலும் மெருகேற்றித்தருவதாக உறுதியளித்து செய்துதந்தார்.
இதற்கிடையில் கடந்த இரண்டு மாதகாலத்துக்கும் அதிகமாக எதனையும் எழுத முடியவில்லை. மாமா, மாமி இருவரும் அடுத்தடுத்த மாதங்களில் இறையடி சேர்ந்தமை, நான் பெரிதும் நேசித்த கையடக்கத் தொலைபேசி களவாடப்பட்டமை, சில அரசியல்வாதிகளின் உட்பூசல் எதிர்விளைவுகள், அலுவலக வேலைப்பளு, வீட்டு வேலைகள் என்பவற்றால் இணையத்தில் நேரம் செலவுசெய்ய முடியாதிருந்தது.
வலைத்தளம் மீளமைக்கப்பட்டதில் எனது அறிமுகப்பதிவு உள்ளிட்ட பல பதிவுகளை இழக்கவேண்டி ஏற்பட்டது. வருந்துகிறேன்.
தொடர்ந்தும் தரமான ஆக்கங்களை தரமுயற்சிக்கிறேன்.எனது புதியமலையகம் http://puthiyamalayagam.blogspot.com/ வலைத்தளத்திலும் தொடர்ந்தும் எழுதத் தலைப்படுகிறேன்.
இந்தக் குறுகிய காலத்தில் என்னோடு ஒத்தாசைபுரிந்து தோள்கொடுத்து துன்பம் தீர்த்த அனைத்து நண்பர்ளுக்கும் நன்றிபகிர்கிறேன்.

'வாழ்தலை சாதல் நிறுத்தச்செய்யினும்
சாதலால் வாழ்ந்ததை உரைக்கச்செய்வோம்.

-அன்போடு
இறக்குவானை நிர்ஷன்

14 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பா..
தொடர்ந்து கலக்குங்கள்.
போன் எடுத்தேன்.. கட் பண்ணிவிட்டீர்கள் :(

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பா..
தொடர்ந்து கலக்குங்கள்.
போன் எடுத்தேன்.. கட் பண்ணிவிட்டீர்கள் :(

‘மல்லியப்பு சந்தி’ திலகர் said...

சிறந்த முயற்சி நண்பரே.
வாழத்துக்கள்.
நமது திறமை
நமது முயற்சி
நமது ‘மேடை’
பிறகேன் சினிமா பாடலும்
காட்சியும்……
எனக்கென்னவோ
அது ‘நமது’களை
பாதிக்கிறதோ என தோன்றுகிறது.
காதுக்கே கஸ்டமாக தெரியும்போது
கண்ணுக்கும் அதை கொடுத்துவிட்டால்
கவனம் ‘நமது’ மீது
குறைகிறது…

தாழ்மையான கருத்து…

Unknown said...

பக்கம் அருமையாக இருக்கின்றது, மலையகத்துக்கென்றொரு வலைப்பதிவை தீட்டியுள்ளமை பாராட்டத்தக்கது.

மாயா said...

வாழ்த்துக்கள்

இறக்குவானை நிர்ஷன் said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
வாழ்த்துக்கள் நண்பா..
தொடர்ந்து கலக்குங்கள்.
போன் எடுத்தேன்.. கட் பண்ணிவிட்டீர்கள் :(
//

நன்றி ரிஷான்.
உங்களை கட் பண்ண மாட்டேன்.:)

இறக்குவானை நிர்ஷன் said...

//‘மல்லியப்பு சந்தி’ திலகர் said...
சிறந்த முயற்சி நண்பரே.
வாழத்துக்கள்.
நமது திறமை
நமது முயற்சி
நமது ‘மேடை’
பிறகேன் சினிமா பாடலும்
காட்சியும்……
எனக்கென்னவோ
அது ‘நமது’களை
பாதிக்கிறதோ என தோன்றுகிறது.
காதுக்கே கஸ்டமாக தெரியும்போது
கண்ணுக்கும் அதை கொடுத்துவிட்டால்
கவனம் ‘நமது’ மீது
குறைகிறது…

தாழ்மையான கருத்து…
//

நன்றி திலகர். தாழ்மையான கருத்து என்று சொன்னதில் நிறைகுடம் என்பதை நிரூபிக்கிறீர்கள்.
கருத்தை பணிவோடு ஏற்கிறேன்.
வருகைக்கு நன்றி

இறக்குவானை நிர்ஷன் said...

//களத்துமேடு said...
பக்கம் அருமையாக இருக்கின்றது, மலையகத்துக்கென்றொரு வலைப்பதிவை தீட்டியுள்ளமை பாராட்டத்தக்கது.
//
நன்றி களத்துமேடு. மலையகத்துக்கென்று தனியான வலைத்தளம் என்பது எனது கனவு.

இறக்குவானை நிர்ஷன் said...

// மாயா said...
வாழ்த்துக்கள்
//

நன்றிகள் மாயா.

ஹேமா said...

வாழ்த்துக்கள் நிர்ஷன்.எப்போதும் ஆவலாய் வந்து பார்ப்பேன்.அப்படியே தொடராமல் இருப்பீர்கள்.இன்று வந்து பார்த்து நிறைந்த சந்தோஷமாய் போய்விட்டது.மிகுந்த சந்தோஷம்.
தொய்ந்து போகவிடாமல் தொடருங்கள்.

இறக்குவானை நிர்ஷன் said...

//ஹேமா said...
வாழ்த்துக்கள் நிர்ஷன்.எப்போதும் ஆவலாய் வந்து பார்ப்பேன்.அப்படியே தொடராமல் இருப்பீர்கள்.இன்று வந்து பார்த்து நிறைந்த சந்தோஷமாய் போய்விட்டது.மிகுந்த சந்தோஷம்.
தொய்ந்து போகவிடாமல் தொடருங்கள்.
//

நன்றி ஹேமா. அடிக்கடி நலம் விசாரித்தீர்கள்.
தோள்கொடுக்க உங்களைப் போன்றோர் இருக்கும்போது இனியும் கவலையில்லை.

King... said...

வாழ்த்துக்கள்..
தொடர்ந்து வெற்றிகளை குவியுங்கள்.....

King... said...

தாமதத்திற்கு மன்னிப்பீர்கள்தானே நிர்ஷன்...

இறக்குவானை நிர்ஷன் said...

நன்றி கிங்.
வந்துவிட்டீர்கள் தானே? அப்புறம் என்ன மன்னிப்பெல்லாம்.