அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
சில அரசியல்வாதிகளுக்குத் தம்மைப் பிரபல்யப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அளவுக்கு அதிகமாகவே உண்டு. இதற்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் - செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.
உண்மையைப் பொய்யாக்குவார்கள்; பொய்யை உண்மையாக்குவார்கள்.... இப்படி எத்தனை எத்தனையோ சித்து வேலைகள்...!
இவர்களிடையே தாங்கள் உயிரோடுதான் இருக்கிறோம் என்பதை அடிக்கடி மக்களுக்கு சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு.
அவ்வாறானவர்களில் இப்படியும் வித்தியாசமான எண்ணம் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சரி. விடயத்துக்கு வருவோம்.
'லங்காதீப' பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் மேல்மாகாண சபை உறுப்பினர் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.
தன்னைப் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் அந்த அரசியல்வாதியின் அபிப்ராயம். இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார். பெரிதாக எந்தக் காயமும் இல்லாமல் தப்பிவிட்டார்.
அந்தச் சம்பவத்தை நேரில்வந்து படம் எடுத்து பத்திரிகையில் பிரசுரிக்கவில்லையே என்ற கோபத்தில் தான் அந்த ஊடகவியலாளரை அவர் தாக்கியுள்ளார்.
இப்படியும் சில சுயநலவாத விஷமிகள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே என்பது பிரதேசவாசிகளின் ஆதங்கம்.
"நான் எப்படியோ தப்பித்து விட்டேன். இவரிடம் சிக்கித் தவிக்கப்போகும் பிரதேச மக்களின் எதிர்காலம் பற்றித் தான் எனக்கு யோசனையாக இருக்கிறது" என்கிறார் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-----------------------------------------------------------------
ஜனாதிபதித் தேர்தலும் ஐந்து கிலோ அரிசியும்....!
ஜனாதிபதித் தேர்தலின்போது கொழும்பை அண்டிய சில பகுதிகளில் அரிசி கொடுத்து வாக்குக் கேட்கும் நபர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஊறுகொடவத்தை, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ ஆகிய பகுதிகளில் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சிலர் வீடு வீடாகச் சென்று ஐந்து கிலோ அரிசி கொடுத்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கடந்த 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தன. இந்நிலையில் 21 ஆம் திகதிமுதல் இப்படியொரு மறைமுகப் பிரசாரம் நடந்து கொண்டிருந்தது.
பிரதான வேட்பாளர் ஒருவரின் சின்னத்தைக் கூறி அந்தச் சின்னம்தான் உங்களுக்கு அரிசி தருகிறது என்கிறார்களாம் அந்த நபர்கள்.
இரண்டு நாட்களாக அப்பகுதியிலுள்ளவர்களுக்கு இந்த அதிஷ்டம் அடித்திருக்கிறது.
இது இவ்வாறிருக்கஇ அரிசி கொடுக்கும் செய்தி மேலும் பல பகுதிகளுக்குப் பரவியதால் குடும்பப் பெண்கள் பலர் தொழிலுக்குச் செல்லாமல் காத்திருந்ததாகவும் தகவல் கிடைத்தது.
முடிவு அறிவிக்கப்பட்டதும் கொடுத்த அரிசியை திரும்பவும் வாங்கிக்கொள்ள அவர்கள் வந்தாலும் வரலாம் என்றது மற்றுமொரு வட்டாரம்.
'அரிசி' க்கு பலன் கிடைக்காமலில்லை.
எனினும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது வேறு கட்சிகளுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தால் கொடுத்த அரிசியை பெற்றுக்கொள்ளப்போவதாக கடந்த இரண்டு நாட்களாக ஒருசிலர் மிரட்டிவருவதாக கூறப்படுகிறது.
அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா!
-----------------------------------------------------------------
மகா சிவராத்திரியும் மகா சல்லாபமும்!
மகா சிவராத்திரி நெருங்கிக் கொண்டிருக்கிறது. வழமைபோல ஆலயங்களில் இரவிரவாக சல்லாபம் செய்வதற்கு இளைஞர்கள் பலர் தயாராகி வருகிறார்கள்.
"மச்சான்... சிவராத்திரி வருதாமே" என்றார் நண்பரொருவர்.
"வரவில்லை. அது நிர்ணயிக்கப்பட்டதுதான். ஏன் என்ன விஷயத்துக்காக" என்றேன் நான்.
"திகதியில ஏதோ பிரச்சினை இருக்குபோல"
"மார்ச் 13 தான் சரியான நாள். என்ன செய்யனும்"
"இல்ல டா. ரெண்டு துண்டுகள (நம்ம நாட்டுல தாய்க்குலத்துக்கு சொல்லுற வார்த்தை) செட் பண்ணியிருக்கேன். ஒன்ன கப்பித்தாவத்த கோயிலுக்கு அனுப்பப் போறேன். மற்றத பொன்னம்பலவாணேஸ்வரத்துக்கு அனுப்பப் போறேன். சரிய டைம் செட் பண்ணிக்கனும். அதான் கேட்டேன்"
இப்படியொரு கூட்டம் இன்னும் அலையுது. புனிதமான நாளில் புனிதத்தைக் கெடுக்க எத்தனை ஆசாமிகள் இப்படிக் கிளம்பியிருக்காங்களோ?
-----------------------------------------------------------------
ஊடக தர்மம்?
இலங்கையிலுள்ள பிரபலமான ஊடக நிறுவனம் அது. அடிக்கடி ஊடக தர்மம் பற்றியும் சமநிலைவாதம் பற்றியும் சமுதாய அங்கீகாரம், நடுவுநிலைமை பற்றியும் எடுத்துரைத்து சமுதாயத்தை விழிப்புணர்வூட்டிக்கொண்டிருக்கும் நிறுவனம்.
அங்கு ஒரு பிரிவிலுள்ள உத்தியோகத்தர்கள் மற்றைய பிரிவுக்கு செல்ல முடியாது. ஒரே நிறுவனம் தான். ஆனாலும் இந்திய பாகிஸ்தான் எல்லை போல.
விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார் நபர் ஒருவர். அங்கு நண்பர்களால் மற்றொருவர் அறிமுகப்படுத்தப்பட்டதும்," நான் இந்த நிறுவனத்தில் தான் பணியாற்றுகிறேன் எனச் சொன்னாராம். அதற்குப் பதிலளித்த மற்றைய நபர் அடடா... நானும் அங்கே தான் என்றாராம்.
ஒரே வீட்டில் பிரிவினைவாதத்துடன் எத்தனை குடும்பங்கள். மற்றைய பிரிவுகளைச் சேர்ந்தோர் எதிரிகளாகத் தான் பார்க்கப்படுகின்றனர்.
தன்னுடைய பிரிவின் தலைவர் விரும்பாத ஒரு நபருடன் அந்தப் பிரிவிலுள்ள எவரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாதாம். அப்படியானால் வேலைக்கு ஆப்பு தான்!
நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு இது நல்ல சந்தர்ப்பம் தானே? அதனால் வாய்மூடி கூத்துகளை பார்த்துக்கொண்டிருக்கிறது. பாவம் இந்த ஊழியர்கள்.
இதுதான் சமநிலை வாதமோ?
11 comments:
நல்ல தொகுப்பு.. அந்த நிறுவனம் காட்சி ஊடகமா? ஒலியா? அச்சு ஊடகமா? இப்படி ஏதாவது க்ளூ கொடுத்திருக்கலாம்.. :)
""சகஜமப்பா""
சொல்லிபோட்டீங்களே! மனதைத் தேத்தவேண்டியதுதான்!
நட்சத்திர வாரத்தில் உங்கள் ஊடகத்துறை சார்ந்த பதிவுகளை இது போல் எதிர்பார்க்கிறேன்,
சகஜமப்பா ;)
//PPattian : புபட்டியன் said...
நல்ல தொகுப்பு.. அந்த நிறுவனம் காட்சி ஊடகமா? ஒலியா? அச்சு ஊடகமா? இப்படி ஏதாவது க்ளூ கொடுத்திருக்கலாம்.. :)//
நன்றி.
சந்தர்ப்பம் வரும்போது சொல்கிறேன்.
//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
""சகஜமப்பா""
சொல்லிபோட்டீங்களே! மனதைத் தேத்தவேண்டியதுதான்!
//
வேறென்னதான் செய்வது?
//என்.கே.அஷோக்பரன் said...
அந்த ஊடக நிறுவனம் மிக மிகப் பெரிதாக இருந்தாலும் அங்கே உள்ளுக்குள்ள ஒரு சிற்றுண்டிச்சாலை இல்லை. வேலைசெய்யிறவையெல்லாம் வெளியில் இருக்கும் சின்ன சின்ன சாப்பாட்டுக்கடையில் தான் சாப்பிடுகிறார்கள்! சிற்றுண்டிச்சாலை வைத்தால் தேவையில்லாமல் சாப்பிடும் நேரங்களிலில் அரசியல் கதைத்து பிறகு தொழிலாளர் எல்லாரும் யுனியன் அமைத்துவிட்டால் பிரச்சினை என்று தான் இந்த ஏற்பாடு!
//
ம்ம்...... இதான் விதி என்று சொல்வது.
உங்களுடன் தொடர்பு ஏற்படுத்த பலதடவைகள் முயற்சித்தேன். முடியவில்லை.
விரைவில் சந்திப்போம்
//கானா பிரபா said...
நட்சத்திர வாரத்தில் உங்கள் ஊடகத்துறை சார்ந்த பதிவுகளை இது போல் எதிர்பார்க்கிறேன்,
சகஜமப்பா ;)
//
நிச்சயமாக.
தற்போதைய அரசியல் நிலைமையில் அடக்கித்தான் வாசிக்க வேண்டும். முடியுமானவரை எழுதுகிறேன்.
naan work pannum niruwanamum ippadithan inth management eappothu purinthu kollumo theriyala????????
நான் ஒரு ஜோக் சொல்லவா நிர்சன் நான் வேலை செய்யும் நிறுவனமும் இப்படிதான். நான் இங்கு வேறு பிரிவுகளிலுள்ள ஊழியர்களையோ அல்லது நிர்வாகிகளையோ கண்டால் ஓடி விடுவேன் ஏடினன்றால் உனக்கு சரியான பயம். என் போ!; என்று சொல்லப்படும் தலைகண்டால் என் தலைய சீவிவிடுவார் அதாவது எனக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற பயம் தான் இவ்வாறான சம்பவங்களை நீங்கள் வெளிப்படுத்துவதில் ரொம்ப மகிழ்ச்சி
நான் ஒரு ஜோக் சொல்லவா நிர்சன் நான் வேலை செய்யும் நிறுவனமும் இப்படிதான். நான் இங்கு வேறு பிரிவுகளிலுள்ள ஊழியர்களையோ அல்லது நிர்வாகிகளையோ கண்டால் ஓடி விடுவேன் ஏடினன்றால் உனக்கு சரியான பயம். என் போ!; என்று சொல்லப்படும் தலைகண்டால் என் தலைய சீவிவிடுவார் அதாவது எனக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்ற பயம் தான் இவ்வாறான சம்பவங்களை நீங்கள் வெளிப்படுத்துவதில் ரொம்ப மகிழ்ச்சி
Post a Comment