“நிவேதப்ரியா” (01)
பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை. சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட, பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான் -
நிவேதன் எழுதத் தொடங்கிய வரிகள் இவை...
நிவேதன் - கொஞ்சம் அறிவோடு பேசுவதற்காகவே படைக்கப்பட்டவன் என பலர் சொல்வதுண்டு. நிவேதம் என்பதற்கு படைத்தல்,கொடுத்தல் என தமிழில் பொருளுண்டு. இது ஓர் உன்னதமான சொல்.
மனிதனுக்கு படைத்தால் அல்லது கொடுக்கப்பட்டால் உணவு, சாப்பாடு என்கிறோம். அதனையே கடவுளுக்கு செய்தால் அதனை நிவேதனம் என்கிறோம்.
நிவேதனும் அவ்வாறுதான். படித்தது கொஞ்சமாயினும் கொடுத்தது அதிகம். அதாவது உழைப்பாளி. அப்படியென்றால் பிறருடைய சந்தோசத்துக்காக எதையும் செய்யக்கூடிய உழைப்பாளி.
நிவேதனுக்கு வயது 25. எழுத்தாளன்.
சோகங்களை, யாரிடமும் சொல்லமுடியாத வேதனைகளை எழுத்தில் வடித்து கிழித்துவிடுவது அவனுடைய வழக்கம். அப்படி அவன் எழுதிக் கிழித்தது ஏராளம்.
பண்டைய கிரேக்கர்கள் இவ்வாறானதொரு முறையை கையாண்டதாக கூறுவதுண்டு. அதாவது தமது பிரச்சினைகளை எழுதிக் கிழித்து ஆற்றிலோ அல்லது இனி தேடினாலும் அந்தக் கிழிஞ்சல்களை அண்டமுடியாத இடத்தில் போட்டுவிடுவர். அப்போது அந்த வேதனைகள் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இப்போதும் பல சமயத்தவர்கள் நேர்த்திக் கடன் என செய்வதில் உள்ள உள்ளாந்த அர்த்தமும் இதுதான் எனத் தெரிகிறது.
பிரியா - இவள் மனைவியாகிவிடமாட்டாளா என ஏங்கிய கூட்டம் ஏராளம். மானிறம், கருவிழிகள், ஒருபுறம் குழிவிழும் மெத்தென்ற கன்னம், பலமடங்கு பள்ளத்தில் விழுந்தாலும் நேர்த்தி மாறாத காட்டாற்றுக்கூந்தல், மெல்லிடை, மேகமேனி என அவள் ஒரு காவியமாகத் திகழ்ந்தாள்.
உதயகாலப் பொழுதொன்றில் வெண்தேவதைகள் இணைந்து செதுக்கிய சிற்பம்போலானவளுக்கு அறிவும் திறமையும் ஆழமாய் நிறைந்திருந்தன. சிந்தனை, பேச்சு, நடத்தை அனைத்திலும் அவள் பாங்கும் பாணியும் தனியானவை. (நிவேதனின் எழுத்துகளில் பிரியா வரையப்பட்டிருக்கிறாள் என்பதற்காக இங்கு அதிகம் தரப்படவில்லை)
ஆண், பெண் என்றாலே அநேகர் பார்வையில் முதலில் தெரிவது “காதல்” என்பதுதான். இவர்கள் இருவரும் எப்படித் தொடர்புபடுகிறார்கள்? எவ்வாறு வாழ்வோட்டத்தில் கலக்கிறார்கள்? இதற்கும் சோக சம்பவங்களை கிழித்துவிடுவதற்கும் என்ன தொடர்பு? – நிவேதனின் வரிகள் தொடர்கின்றன…
பசுமைப்பொழுதுகளை மீள்நினைவூட்டும் சந்தர்ப்பங்கள் அடிக்கடி வாய்த்துவிடுவதில்லை। சில சௌந்தர்யங்கள் நினைவுக்குவரும்போது அதிலிருந்து மீளுவதோ மீட்கப்படுவதோ வேதனையாகத்தான் இருக்கும். காலத்தின் கட்டாயத்தினால் கைவிடப்பட்ட பழக்கமில்லாத உறவுகள் பின்னர் காலப்போக்கில் புரிதலோடு பழகுதலும் ஆத்மார்த்த எல்லைகளைத் தாண்டாமல் ஆட்கொள்ளப்படுவதும் தனிச்சுகம்தான்.
சுகம் தான் வேதனைகளாக பரிணாமம் கொள்கிறது. நானும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதுவரை எந்தச் சோகத்தையும் இவ்வளவு நேர்த்தியாக எழுதி நான் கிழித்ததில்லை. ஆனால் இதனை நிறைமனதோடு எழுதுகிறேன். ஏனென்றால் காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு பற்றி மனதுக்குள் ஊன்றிப்போனதை என் எழுத்துக்களால் மீட்டெடுக்கிறேன். மறக்க முடியாத பாழ்ய நினைவுகளுக்குள் மங்காத நினைவுகளாய் இன்னும் தொடரும் பலவற்றை கோர்த்துவிடுகிறேன். இங்குவரும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பிரியாவுக்கும் தொடர்பு இருக்கிறது.
ஆனால்…. இதுவும் கிழிக்கப்படவேண்டியது.
(தொடர்ந்தும் பேசுவான்)
9 comments:
நிர்ஷ்
பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதில் கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளால் வடித்து விட முடியாது.கடந்த கால அனுபவங்கள் கசப்பாக இருந்தப்போதிலும் எம் மனக்கண் முன் அவற்றை மீளக்கொண்டு வருது ஒரு சுமையான சுகமாகும். இந்த சுகத்தை அனுபவிக்கும் படலத்தை நீ தொடங்கி விட்டாய் போலும். உன் நினைவுகள் தொடரட்டும். எதிர்காலத்தில் என் நினைவுகளையும் பதிவிட எதிர்பார்க்கின்றேன். பிரமாதமாக இருக்கின்றது
நிரு

நன்றாக எழுதியிருக்கிறீர். நிர்ஷன். வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள். இவ்வாறான எழுத்துக்கள் பெரும்பாலும் எழுதப்படுவது குறைவு. நீண்ட காலத்துக்குப் பிறகு இவ்வாறன எழுத்து வகை ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.
நகைச்சுவையும், நல்ல எழுத்தோட்டமும், காத்திரமான உள்ளடக்கமும் கொண்டு தொடருங்கள். எப்போதும் பிடித்தமானதை பிடித்தமாக எழுதுவது சிறப்பானது.
நல்லது பெரியதொரு இடைவெளிக்குப்பின்னர் வந்திருக்கும் இந்தப்பதிவின் தொடர்ச்சி இது போலவும் இன்னும் சிறப்பாகவும் அமையட்டும்.
- அதிரன்.
www.tharakai.wordpress.com
//Anonymous Anonymous said...
நிர்ஷ்
பசுமையான நினைவுகளை மீட்டிப்பார்ப்பதில் கிடைக்கும் சுகத்தை வார்த்தைகளால் வடித்து விட முடியாது.கடந்த கால அனுபவங்கள் கசப்பாக இருந்தப்போதிலும் எம் மனக்கண் முன் அவற்றை மீளக்கொண்டு வருது ஒரு சுமையான சுகமாகும். இந்த சுகத்தை அனுபவிக்கும் படலத்தை நீ தொடங்கி விட்டாய் போலும். உன் நினைவுகள் தொடரட்டும். எதிர்காலத்தில் என் நினைவுகளையும் பதிவிட எதிர்பார்க்கின்றேன். பிரமாதமாக இருக்கின்றது
நிரு//
நன்றி நிரஞ்சனி.
நினைவுகளும் ஒருவகையில் இறைவனின் கொடை தானே?
//இவனைப்பற்றி said...
நன்றாக எழுதியிருக்கிறீர். நிர்ஷன். வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் எழுதுங்கள். இவ்வாறான எழுத்துக்கள் பெரும்பாலும் எழுதப்படுவது குறைவு. நீண்ட காலத்துக்குப் பிறகு இவ்வாறன எழுத்து வகை ஒன்றைப் பார்த்திருக்கிறேன்.
நகைச்சுவையும், நல்ல எழுத்தோட்டமும், காத்திரமான உள்ளடக்கமும் கொண்டு தொடருங்கள். எப்போதும் பிடித்தமானதை பிடித்தமாக எழுதுவது சிறப்பானது.
நல்லது பெரியதொரு இடைவெளிக்குப்பின்னர் வந்திருக்கும் இந்தப்பதிவின் தொடர்ச்சி இது போலவும் இன்னும் சிறப்பாகவும் அமையட்டும்.
- அதிரன்.
www.tharakai.wordpress.com//
உங்களைப் போன்ற தரமான எழுத்தாளர்களின் வருகை எனக்குப் பெருமை தருகிறது.
அதிக வேலைகள் மற்றும் சிற்சில பிரச்சிகைள் காரணமாக வலைப்பக்கம் வரமுடியவில்லை.
இனி தொடர்ந்து எழுதுகிறேன். உங்கள் ஆதரவுடன்.
நன்றி
அருமையான எழுத்து நிர்ஷா..
தொடர்ந்து எழுதுங்கள்..
மிக அதிக நாட்கள் உங்களைக் காணவில்லை..எங்கிருந்தீர்கள் நண்பா?
// எம்.ரிஷான் ஷெரீப் said...
அருமையான எழுத்து நிர்ஷா..
தொடர்ந்து எழுதுங்கள்..
மிக அதிக நாட்கள் உங்களைக் காணவில்லை..எங்கிருந்தீர்கள் நண்பா?//
நன்றி ரிஷான். மீண்டு(ம்) வந்திருக்கிறேன். இனி தொடருவோம்.
Hi KB,
Eppadi Irukirai? Nalama? Saapitiya?
Arumaiyana Varigal. innum ethirpaarkiren.
Unnidam solla athigam irukindrana.
Ennudaiya E.D.D - Dec 25th. Unaku Santhosamai irukum ena ethirparkiren.
Nandri.
Nithu
நிது,
எனக்கும் நிறைய கதைக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் சில கசப்பான சம்பவங்கள் தடுப்பதாக உணர்கிறேன்.
வருகைக்கு நன்றி.
Post a Comment