"வேலை இல்லாதவேளை"
என் கறுப்புவானத்தை
ஊடறுக்கும்
வலிக்கும் தென்றல்!
மனவெளியெங்கும்
நெருப்பு சுவாசம்!
கறைபடிந்த பார்வைக்கோலங்களில்
குழிநிறைந்த தடயங்கள்!
தொட்டதெல்லாம் பட்டுப்போவதாய்
எண்ணங்கள்
விட்டுப்போகாமல் தொடரும்
துன்பங்கள்
இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்
உதவிக்கு அழைப்பதாயெண்ணி
தொலைபேசியை
புறக்கணிப்பவர்கள்
மறுபக்கம்
"வேலை இல்லையாமே"
கிண்டல் பேச்சுடன்
இன்னொரு கூட்டம்
"எப்படி இருந்தாய்?"
இறந்ததை
நினைவூட்டும்
எதிர்வீட்டின் சாட்டம்
"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்
“சனி நேரம்
கூடாத காலம்”
எதிர்பார்ப்புகளை சிதைக்கும்
வார்த்தைகளும் தாராளம்
மறுவேளை உணவுக்கு
மண்டியிட முடியாமல்
தடுக்கும்
தன்மானம்
“நம்பவைத்துக் கழுத்தறுத்தானே”
- ஈசனைத்தூற்றியழும்
மனோபாவம்
வேலை இல்லாதவேளை -
உணர்தலுடன்
ஒரு புரிதல்
இல்லாதவொன்றுக்கு
எல்லாவற்றையும்
காணிக்கைபடுத்திப்பார்த்திருக்கிறேன்
காலச்சுவடு
காயங்களை
ஆற்றுப்படுத்தும்வரை..!
-ஆர்.நிர்ஷன்
11 comments:
உன் கஷ்டம் எனக்கு புரிகிறது.நீ துக்கப்படும் போது உன் துன்பத்தை பகிர்ந்துக்கொள்ள காத்திருக்கும் நண்பி நான்.அது உனக்கும் தெரியும்.உன்னை படைத்தவன் நிச்சயம் உனக்கு ஒரு வழிகாட்டுவான் என்பது உறுதி.பொறுத்திரு காலம் உன் கவலைகளுக்கு மருந்தாகும்.உன் கவலைகளை பகிர்ந்துக்கொள்வதற்கும் உனக்கு தோள் கொடுப்பதற்கும் ஒரு நண்பி இருக்கின்றாள் என்பதை மறந்து விடாதே.இத்தனை கஷ்டம் வந்தப்போதும் சோர்ந்து போகாமல் சாதிக்க துடிக்கும் நீ எதிர்காலத்தில் யாரும் எட்ட முடியாத சிகரத்தில் இருப்பாய் .அன்று அதனை பார்த்து உன்னை கைவிட்டவர்களெல்லோரும் ஆச்சரியப்படுவார்கள் வருத்தப்படுவார்கள்.தென்டச்சோறாக இந்த சமுதாயத்தில் எத்தனையோ பேர் வாழ்ந்து வரும் போது ஒரு வயிற்று சோற்றுக்காக எந்தவொரு கடினமான வேலையையும் செய்ய பின்னிற்காத உனக்கு நான் நண்பியாக இருப்பதே பெரும் பாக்கியம்.
.POPX@GMAIL.COMJ
SO NICE.I HAVE AN EXPERIANCE LIKE THIS.GOOD WORK MEN.KEEP GOING.
/இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்//
//"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்//
உணர்வுபூர்வமான, யதார்த்தமான வரிகள் நிர்ஷன்
// Anonymous said...
உன் கஷ்டம் எனக்கு புரிகிறது.நீ துக்கப்படும் போது உன் துன்பத்தை பகிர்ந்துக்கொள்ள காத்திருக்கும் நண்பி நான்.
//
அன்புத்தோழிக்கு நன்றி. பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே?
வாழ்வதற்காய் படைக்கப்பட்டிருக்கிறோம்.சில வேளைகளில் வாழ்வதுகூட சாதனை என எண்ணத்தோன்றுகிறது.
உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி.
//SUDHAGAR said...
SO NICE.I HAVE AN EXPERIANCE LIKE THIS.GOOD WORK MEN.KEEP GOING.
//
Happy to see you back.
tnx frnd.
// கலை - இராகலை said...
/இருக்கும்போது ஏய்ந்து
இல்லாதபோது
பாய்ந்துபோன
நண்பர்கள் ஒருபக்கம்//
//"சாப்பிட்டாயா?"
கேட்காத
உறவுகள் ஏராளம்//
உணர்வுபூர்வமான, யதார்த்தமான வரிகள் நிர்ஷன்
//
நன்றி கலை.
விரைவில் உங்களோடு தொடர்புகொள்கிறேன்.
http://www.bangaloreliving.com/tamilmp3songs/TNO7AL4777Songs.php
Click the Path, Select the 4th song and listen
அண்ணா...
கவிதை தரமாக இருந்தது,
ரசித்தேன்
"சாப்பிட்டாயா"?
கேட்காத
உறவுகள் ஏராளம்
துடித்தேன்....
துர்கா
அண்ணா...
கவிதை தரமாக இருந்தது.
ரசித்தேன்
"சாப்பிட்டாயா"?
கேட்காத
உறவுகள் ஏராளம்
துடித்தேன்
துர்கா
ungalin indha pudhukkavidhai anaivarukkum podhukkavidhai dhan....velai illaadha velaiyil ippadi oru padaipu...miga periya velayyaaga thaan thonugiradhu....any way velai kidaika vaalthukkal....vegu viraivil... velai yai thodarndhu konde irungal...naan thodara sollum velai umadhu arumaiyaana kavidhai padaippugalai...
Post a Comment