நிவேதப்ரியா (V)
ஆமாம்..! அவளை அடைய முடியாது என்று தெரிந்தும் மனம் ஏன் இப்படி தூண்டில் புழுவாய் துடித்துப்போகிறது என பல சந்தர்ப்பங்களில் நினைத்ததுண்டு.
மணவறையில் சந்திக்க முடியாத அவளை மனவறையில் வைத்திருப்பதற்கான நோக்கம் என்ன என தனிமையில் சிந்தித்ததுண்டு.
விதைக்கப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்ட காதல் என்னுடையது. ஆழமான அன்பினைக் கொண்டு தனியறை சமைத்து நினைவுகளோடு வாழும் நிந்திக்கப்பட்ட உயிர் என்னுடையது.
சடப்பொருள் என்றால் திரைகொண்டு மறைக்க முடியும். சுவாசத்தில் கலந்து ஜீவனின் அத்தனை அந்தரங்ககளையும் சூழ்ந்து நரம்புகளெங்கும் விரிந்து மனதில் புடைத்துக் கிடக்கும் காதலை எங்ஙனம் மறைப்பது?
மொட்டை மாடித் தனிமையில் விடைகிடைக்குமா என சிந்திக்கத் தொடங்கினேன்.
அவளிடமிருந்து விலகிச் செல்வதுதான் சரியான முடிவு என்பதை ஆழ்மனது தீர்மானித்தது.
அதற்காக என் காதலை புதைத்துவிடத் தீர்மானித்து விடியலுக்காக காத்திருந்தேன்.
அப்போதைய மனதின் கீறல்கள் இவை.
ஓர் உண்மை வாசகம்
கடிகார முள்கூட இடியாய்
நகரும் மௌனகனத்தில்
மொட்டைமாடிக் குளிரில்
நிலாகீற்றோடு மென்காற்றுதழுவ
யாருமற்ற பொழுதை
ஆற்றுகையின்றி கழிக்கிறேன்…
பிரவாகங்களைத் தாண்டிய புயல்
பெருங்கோபம்கொண்டு
தாக்கிய மண்குடில் போல
உணர்வற்று நான்…
உயிர்நரம்புகளில் சரணங்களாய்
ஒலிக்கும் உன் பெயரோடு
உன்னை ஏகிக்கும்
மையப்புள்ளி மட்டும்
எனக்குள் உயிர்தாங்குவதாய்….
இமைக்கதவுகளில் செல்லரித்துப்போன
உன் விழிநயனங்களை
எண்ணிச் சிலாகிக்கிறது
மனது
மறக்கமுடியாத தருணங்களிலும்
தவிர்க்காமல் வந்துபோகும் நினைவுகளை
ஆலாபித்து முன்னிறுத்துகையில்…
கீற்றையும் தாண்டி
ஒளிதாங்குகிறது
உள்ளம்
கோடி நட்சத்திரங்களோடு
நிலவு – நீள் வானில்
கோடி பூக்களோடு
நீ – என் வானில்
பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு
‘நீ
எங்குசென்றாலும் - உன்
முதல் புகுந்தவீடு
என் இதயம் தான்’
விடிந்தது அவள் அழைப்போடு..!
நினைவுகளோடு உறங்குவதும் காலையில் கைத் தொலைபேசியில் அவள் பெயர் பார்த்து ஹலோ சொல்லுவதும்….
ஆக… எத்தனை நாளைக்கு துடித்துத் துடித்து என்னையே நான் துண்டாடுவது?
காதலை காலனுக்கு அர்ப்பணித்து அன்புக்கு விடைகொடுக்கும் நேரத்தை அவளிடமிருந்து எதிர்பார்த்தேன்.
முதல் சந்திப்பு
முதல் சந்திப்பு…பன்னிரு வருடங்களுக்குப் பிறகு…
எந்த வார்த்தையும் நேரடியாகப் பேசியதில்லை. எந்தச் சந்தர்ப்பதிலும் எமது பார்வைகள் சில நொடிகளுக்கு மேல் நீடித்துக்கொண்டதில்லை.
என்ன பேசுவது? எப்படிப் பேசுவது?
பிஞ்சுக் குழந்தைக்கு பேச்சுக் கற்றுக்கொடுப்பது போல்… மனம் அல்லாடித் தள்ளாடியது.
இடம்,நேரத்தை தீர்மானித்து ஒருவாரத்தின் பின்னர் சந்திப்புக்கான விடியலும் விடிகிறது.
குளிர்ச்சியான சூரியன், மென்மைத் தென்றல், காரணமின்றிய முறுவல், நேரத்துக்கு நேரம் இதயத் துடிப்பில் மாற்றம்….என அத்தனையும் என்னை இறுகக் கட்டிப்போட்டன.
தலையணை மந்திரம்போல் அவள் ஒருவார்த்தையில் நான் கட்டுண்டுவிட்டால்….?
அதென்ன தலையணை மந்திரம் எனக் கேட்கிறீர்களா?
குடும்பத் தலைவன் எப்போதும் வேலைப்பளுவில் தான் இருப்பான். காலையில் சம்பிரதாய முறைப்படியான தொழில். மாலையில் வீடு. இரவில் மறுநாளைக்கான சிந்தனை…. இப்படி அவனது சிந்தனைகள் ஆழமாக மனதில் ஓடிக்கொண்டுதான் இருக்கும்.
குடும்பத் தலைவிக்கு ஏதாவது தேவைப்படும் சந்தர்ப்பத்தில் அதனை கணவரிடம் வெளிப்படையாகச் சொல்லச் சிரமப்படுவாள்(அந்தக்காலத்துப் பெண்). ஏதாவது முக்கியமான தேவை இருக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் தந்திரமான மந்திரம் தான் இந்தத் தலையணை மந்திரம்.
அதாவது கணவனும் மனைவியும் உடலுறவு கொள்ளும்போது. இருவருமே ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பார்கள். அப்போது மனைவியின் மீது அதீத அன்பினையும் பிணைப்பினையும் கணவன் கொண்டிருப்பான்(ஆய்விலும் நிரூபிக்கப்பட்டது).
உடலுறவின் பின்னர் தன் கணவனை தலையணையோடு வாரியணைத்து தனது தேவையை சொல்லுவாளாம் மனைவி. அந்தச் சந்தர்ப்பத்தில் எதைச் சொன்னாலும் கணவன் தலையாட்டுவானாம்.
அதுதான் தலையணை மந்திரம். அது பலிக்கும் என்பது உண்மை எனச் சொல்கிறார்கள். எழுத்தாளர் சுஜாதா பல சந்தர்ப்பங்களில் இதைச் சொல்லியிருப்பார்.
(தொடர்ந்தும் பேசுவேன்)
8 comments:
நெஞ்சை தொட்டு தொட்டு செல்கின்றன
தொடர்ந்தும் எழுதுங்க்கள்
நெஞ்சை தொட்டு தொட்டு செல்கின்றன
தொடர்ந்தும் எழுதுங்க்கள்
விதைக்கப்பட்ட பின்னர் சிதைக்கப்பட்ட காதல் என்னுடையது. ஆழமான அன்பினைக் கொண்டு தனியறை சமைத்து நினைவுகளோடு வாழும் நிந்திக்கப்பட்ட உயிர் என்னுடையது.
Arumaiyana warigal nanba.
sithaikapatta kathalodum ninaivugaludan walum ninthikapatta uirgal ethanaio entha pirabanjathil eruka than seiranga.
keep on writing
-priyasagi-
நிவேதபிரியா நினைவு பதிவுகளை ஆவலோடு வாசித்து வரும் வாசகி நான். இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஓட்டு மொத்த மனிதர்களும் மறக்க முடியாத பால்ய நினைவுகளால் ஆட்கொள்ளப்படுவது வெளிப்படை உண்மையான விடயமாகும். சொல்லாத காதல் இ சொல்லி ஏமாந்த காதல் இஜெயித்து தோற்ற காதல் இப்படி பால்ய வயதில் ஏற்படும் இவ்வாறான பசுமையான நினைவுகளை மறக்க முடியாமல் தவிக்கும் எத்தனையோ ஜீவன்களில் ஒருவராகவே இந்த நிவேதனும் இருக்கின்றார்.தொடர்ந்து இந்த பதிவை வாசித்ததால் நிவேதனின் உணர்வுகளை ஓரளவுக்கு புரிந்துக்கொள்ள முடிந்தது. நிவேதனின் பதிவை மீண்டும் மீண்டும் வாசித்ததில் ஒன்றை மாத்திரம் தெளிவாக புரிந்துக்கொண்டேன்.நிவேதனை பொருத்தவரை பேரிழப்பு என்ற வார்த்தைக்கு ஒத்தக் கருத்து உள்ளச் சொல் பிரியா.ஏனெனில் அவன் வாழக்கையில் எதையாவது பறிக்கொடுத்திருக்கின்றான் என்றால் அது பிரியா மாத்திரமே. நிவேதனின் பதிவில் இது ஆணித்தரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
“காத்திரமான, என்னை பாதித்த, என் நினைவுகளைத் தீண்டிய, நினைவுகளிலிருந்து நீங்காத, பரவசப்படுத்திய, பக்குவப்படுத்திய, மரணம் வரை மனதோடு வாழக்கூடிய உறவு ;
காலம் முழுவதும் அனுபவிக்க
காலன் எனக்குத் தந்த ஆயுள் தண்டனைதானா உன் நினைவுகள்?"
இரகசியங்களோடு துளிர்ந்த காதல் மரணத்தின் இறுதி மூச்சோடு மாண்டுபோகட்டும்.”
பிரியமுயலும் உன்னோடு
ஜாமங்கள் தாண்டியும்
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
ஓர் உண்மை வாசகத்தோடு “
நிவேதனின் அனைத்து குணாதிசயங்களையும் பிரியாவும் கொண்டிருந்தாள் .தனித்திருப்பது முதற்கொண்டு நகத்தை அடிக்கடிப்பது நிவேதனுக்கு பிடித்த உணவுகளை உருசித்து சாப்பிடுவது வரை இப்படி எத்தனையோ ஒற்றுமைகள் இவர்களிடம்.நிவேதனின் மனதில் பிரியா நீங்காத இடம்பிடித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். “ஐடியல் கப்பல் “ என்ற வாசகம் இவர்களுக்கு தான் பொருந்தமோ என என்னை நான் பல முறை கேட்டதுண்டு. பிரியாவை இவ்வளவு நேசித்த நிவேதனின் காதல் சரியான நேரத்தில் சொல்லாததால் இன்று செல்லா காசாகி விட்டதா ? இல்லை இது தான் விதியா?
நிச்சயம் இது விதியாக இருக்க முடியாது .அப்படி இருந்திருந்தால் மீண்டும் இவர்கள் சந்தித்திருக்க மாட்டார்கள் அல்லவா? இவர்களின் காதலை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதற்கு கடவுள் கொடுத்த சந்தர்ப்பமே இந்த சந்திப்பு.பிரியா என்ற உயிர்மூச்சுடன் இத்தனை நாள் வாழ்ந்து பல சாதனைகளை புரிந்த நிவேதனின் எதிர்காலத்தை மேலும் சிறப்பிக்க இந்த பிரியாவினால் மாத்திரமே முடியும்.நிவேதனின் வாழ்க்கையில் வேறெந்த பெண் குறுக்கிட்டாலும் அது வெறும் சம்பவமாக அல்லது ஒரு விபத்தாக மாத்திரமே கருதப்படும். ஆகவே இவனது வாழ்க்கையில் இன்றியமையாததொரு உயிராக இன்று பிரியா உருமாறியுள்ளார்.
பிரியாவின் பார்வையின் வீச்சு, நிவேதனின் உயிர்நரம்புகளை கிள்ளிவிட்ட சந்தர்ப்பங்களை மறக்கமுடியாது தவிக்கும் இவனின் காதல் கைகூட என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நீ எங்குச் சென்றாலும் உன் முதல் புகுந்த வீடு -என் இதயம் தான் என தன்னைத்தானே சமாதானப்படுத்தும் இந்த நிவேதனின் பெயரை வரலாற்றில் இடம்பிடிக்கச் செய்யக்கூடிய ஒரே ஜீவன் இந்த பிரியா அன்றி வேறுயாரும் இல்லை.
பிரியா உன் மௌனம் கலைய வேண்டிய தருணம் இது.உனக்காகவே 13 வருடங்கள் வாழ்ந்தவனை இனி வாழ வைக்க வேண்டியது உனது தார்மீக கடமையாகும். ஆனைவரையும் வியக்கவைக்கும் பல திறமைகளில் ஒட்டுமொத்த வடிவமே இந்த நிவேதன் தான் .அவனை வாழவைப்பதும் சாகடிப்பதும் உனது கையில் தான் உள்ளது.இந்த தொடரை நீயும் வாசிக்கின்றாய் என்பது எனக்கும் தெரியும். இனி நீ அவனை சந்திக்கும் போதோ இல்லை தொலைப்பேசியில் உரையாடும் போதே உன் காதலை அவனிடம் சொல்லிவிடு.
மணவறையில் சந்திக்க முடியாத உன்னை மனவறையில் வைத்து இத்தனை நாள் தவித்த நிவேதனை இனியும் தவிக்க விடாதே .நியின்றி நிவேதன் அனுபவித்த நரக வேதனைகளை இந்த பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன்;.மேடைப் பதிவில் உங்கள் காதலை அறிந்துக்கொண்ட நான் மணவறையில் மணமக்களாக உங்களை பார்ப்பதற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றேன்.பிரியா நிவேதனை மேலும் வேதனைப்படுத்தாதே உன் மௌனத்தை களைந்து விடு.
-பிரியசகி-
நிவேதனும் ப்ரியாவும் நினைவுகளால் மாத்திரமன்றி நிஜத்திலும் சேர வேண்டும் என்ற ஆசையில் ப்ரியாவின் மனது மாறும் என்ற உறுதியான நம்பிக்கையில் நிவேதப்ரியா(V)பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்தேன்.ஆனால் அதனை பார்த்த பின்னரும் ப்ரியாவிடமிருந்து எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லை.ப்ரியா நீ படித்து பட்டம் பெற்று சிரகத்தில் இருப்பதால் நிவேதன் உனக்கு பொருத்தமானவன் இல்லையென நினைக்கிறாயா? குணத்தில் நாணயத்தில் திறமையில் பண்பில் அறிவில் மனிதநேயத்தில் அவன் சிகரத்தையே தொட்டு விட்டான்.எந்தவகையிலும் அவன் உனக்கு சளைத்தவன்' அல்ல. இனியும் நீ மெளனியாக இருந்தால் அவன் உன்மீது வைத்த அளவுகடந்த காதலை நீ கொச்சைப்படுத்தி விட்டாய் என அர்த்தப்படும்.நிவேதனால் காதலிக்கப்படுவதற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.இப்போது நீ அவனை மிஸ் பண்ணிவிட்டால் இனி எப்போதும் அவனை அடைய முடியாத துரதிஷ்டசாலியாக ஆகிவிடுவாய்.நீ எப்போதும் அதிஷ்டசாலியாக இருக்க வேண்டும் என்பதே எனது அவா.உனது தொடர் மெளனம் நிவேதனின் காதலை மாத்திரமல்ல எனது ஆத்மார்த்த வெளிப்பாட்டினையும் கொச்சைப்படுத்தி விட்டதாக அர்த்தப்படும்.நிவேதனால் காதலிக்கப்பட்ட உனக்கும் இதயம் உண்டு . அதில் கொஞ்சம் ஈரம் உண்டு என நினைக்கின்றேன்.
பிரியசகி
Unarvugal unmai enil adhu uyirpikka pada vendum.
vaalthi vidai peruvadhu ellorukkum therindhathu than.
unmai enil uyir kodukkavum Mr.Nivethan.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
கவிதைகளின் கணம் மனதை பதம் பார்க்கின்றன.வாழ்த்துக்கள்.
அண்ணா உங்களுடைய மின்னஞல் முகவரி?
Post a Comment