எனக்குள்…அழகோடு கடவுள், காதல், பணமும் சேர்ந்து…
அழகு, கடவுள், காதல், பணம் - இந்தத் தொடருக்கு என்னை அன்போடு அழைத்து பரிசையும் தந்த தம்பி கோபிக்கு நன்றிகள். மனதில் தோன்றியதை அப்படியே எழுத்தாக்கியிருக்கிறேன்.
அழகு
அழகு என்ற வார்த்தையே அழகுதான். என்னைப்பொருத்தவரையில் இயற்கையின் அழகு ரொம்பப் பிடிக்கும். மனதுக்கு எப்போதும் திருப்தி தரக்கூடிய நிரந்தரமான அழகு அது.
பலர் சொல்வதைப்போல பெண்கள் அழகானவர்கள் தான். ஆனால்….(?)
பச்சைப் புல்வெளி, தோகைமயில், அந்திவானம், தனித்த ரயில்பாதை, பரிதிவட்ட வளர்பிறை, ஒற்றைரோஜா, போதிமரம், மழையில் நனையும் மலை, ஜோடிக்கிளிகள் இப்படி எத்தனையோ விடயங்கள் எனக்குள் பரவசமான இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றன.
கடவுள்
உயிர் இருக்கிறதா எனக்கேட்டால் ஆமாம் என்கிறோம். காட்ட முடியுமா என்றால்??
ஏதோ ஒரு சக்தி இயங்கிக்கொண்டு இருக்கிறது. அதற்கு கடவுள் என நாம் பெயர்வைத்திருக்கிறோம்.
இப்போதெல்லாம் மனிதனுடைய தேடல்கள் வெளி உலகத்தை நோக்கினவாக இருக்கின்றன. வளங்களைக் கொண்டு புதிதாக என்ன செய்யலாம்? ஏதை உற்பத்தியாக்கலாம்? என்றெல்லாம் நினைக்கிறோம்.
ஆனால் அதேபார்வையை உள்நோக்கி செலுத்துவோமானால்…. அங்கும் ஏராளமான வளங்கள் உண்டு. நினைத்துப்பார்க்க முடியாத பலவற்றை சாதிக்கலாம்.
நானும் அதை உணர முற்பட்டுக்கொண்டிருக்கிறேன்.
“அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.
காதல்
காதலில் பாதிக்கப்பட்டவர்கள் இப்படிக்கூறுவார்கள்:
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லாமல் போவது
காதலில் களிப்பவர்கள் இப்படிக்கூறுவார்கள்
கா = காத்திருந்து
த = தவித்து
ல் = ல்லயித்திருப்பது
காதல் ஒரு மந்திரச்சொல். முன்னேறவும் வைக்கும், முடிச்சுப்போடவும் செய்யும். பொருத்தமான தெரிவை அடிப்படையாகக் கொண்டே அதன் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
நீந்தத் தெரிந்தவர்களுக்கு காதல்கடல் ஒரு வாழ்வுலகம். நீந்தத் தெரியாதவர்களுக்கு???
நான் நீந்தக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
பணம்
இந்தக்காலத்தைப் பொருத்தவரையில் குணத்தை விட பணத்துக்கே பலம் அதிகம். “பணம் பத்தும் செய்யும், குணம் என்னத்தச் செய்யும்?” எனக் கேட்பவர்கள் தான் அதிகம்.
பணம் ஒரு போதை – சரியாகக் கையாளாவிட்டால் ஆளை மூழ்கடித்துவிடும்.
இந்தத் தொடருக்கு நான் இருவரை அழைக்க விரும்புகிறேன்। ஊடகத்துறையில் சமூகத்துக்காக அக்கறையுடன் துணிந்து செயலாற்றுபவர்கள் குறைவு. அவ்வாறு செயற்படுபவர்களின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடியவர் சிவலிங்கம் சிவகுமாரன். தாண்டவத்திற்கு சொந்தக்காரர்.இவருடன் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தை மறக்க முடியாது. சிவகுமாரனின் எழுத்துநடையையும் உலக அறிவையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருடைய ஆக்கங்களை தொடர்ந்தும் வாசித்துவருகிறேன். குறிப்பாக ஆங்கிலத் திரைப்படங்களை தனக்கே உரித்தான பாணியில் விமர்சனம் செய்வார். அன்புக்குரிய சிவா அண்ணாவை தொடருக்கு அழைக்கிறேன்.
பகீ - “ஊரோடி” பக்கத்துக்கு சொந்தக்காரர். தொழில்நுட்பம்,இணையம் போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சிவாய்ந்த திறமையாளர். மாயா,வந்தி ஆகியோருடன் இணைந்து 2008 இன் ஆரம்பத்திலிருந்து பதிவர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஆவலாக இருந்தவர். நல்ல நண்பர். அதிகம் வேலை காரணமாக அண்மைக்காலமாக பதிவைக் காணவில்லை. ஒருவிடயத்தை பலகோணங்களிலிருந்து பார்க்கக் கூடிய பகீரதனை அழைக்கிறேன்.
5 comments:
////“அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.////
superb machu
அருமையாக எழுதியிருக்கிறீங்கள் நிர்ஷன்! வாழ்த்துக்கள்!
அழகான தொகுப்பு வாழ்த்துக்கள்
//ஆனால் அதேபார்வையை உள்நோக்கி செலுத்துவோமானால்…. அங்கும் ஏராளமான வளங்கள் உண்டு. நினைத்துப்பார்க்க முடியாத பலவற்றை சாதிக்கலாம்.//
அற்புதமான வார்த்தை...
ஆன்மிகத்தில் அக்கறை உண்டோ???
//அம்மா பசிக்குது” என அழும் குழந்தைக்கு முன்னால் கடவுளுக்கு காணிக்கை போடுவதை எதிர்க்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நான்.//
நானும் இதே கூட்டம் தான்...
அருமையான பதிவு...
வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள் அழகு தமிழில் அழகாக சொல்லியுள்ளீர்கள். உண்மை தான் இன்றைய உலகை ஆட்டி வைக்கும் முக்கியமான நான்கு விடயங்கள் தானே இவை....?
எனது பார்வையில் இவை நான்கு விடயங்களும் http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/09/blog-post_18.html
எனது சந்தேகங்களுக்கும் விடை கூறுங்கள்
Post a Comment