Todays Date:

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்..!


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

ஊருக்கே ஒன்றென
ஒப்பாரி வைக்கும்
ரேடியோ

கையில் சிகரட்டோடும்
கசிப்பு போத்தலோடும்
வாசலில் அப்பா

எதிர்த்துப்பேச நாவில்லாமல்
வெற்றிலை தின்று
இடைவிடாமல்
காறித்துப்பும் அம்மா

பகல்முழுதும் கூத்தடித்து
பாதிப்போதையோடு
கதவைத் தட்டும் அண்ணா

உதவி ஒத்தாசையென்றுகூறி
ஓரமாய் ஒளிந்திருந்து
மாரை வெறித்துப்பார்க்கும் மாமா

இத்தனைக்கும் மத்தியில்…

நான் படித்துக்கொண்டிருக்கிறேன்…

மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!

-இராமானுஜம் நிர்ஷன்
(தங்கை துர்காவின் வேண்டுகோளுக்கிணங்க மீள்பதிவிட்டுள்ளேன்)

5 comments:

சுரேகா.. said...

அவள் வலியை அப்படியே உணரவைக்கும் கவிதை!

வாழ்த்துக்கள் நிர்ஷன்!

அன்புடன் அருணா said...

ம்ம்.ஏற்கெனவே படித்த நினைவிருக்கு.வாழ்த்துக்கள்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மடியில் உட்காரச்சொல்லி
மல்லுக்கட்டும்
வாத்தியாரின் பாடங்களை!//


இதுதான் வேதனையான வரி.

jeevajothy nallaiah said...

மலையக இயலாமை நிலை தீர வழி எதுவோ.....?

jeevajothy nallaiah said...

மலையக இயலாமை நிலை தீர் வழி எதுவோ.....?